Share it if you like it
ஜப்பான் நாட்டில் 2011-ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியில் ஃபுகுஷிம் அணு மின் நிலைய நிலையத்தில் கடல் நீர் புகுந்தது. மின்சாரம் துண்டிக்கப்பட்டு அணு உலைகளை குளிர்விக்கும் இயக்கம் நின்று போனது. அணு உலைகள் உருகின. அதிலிருந்து கதிரியக்க எரிபொருள்கள் வெளியேறி கடலில் கலந்தன. இதனால் ஜப்பானிய கடல் உணவுப் பொருள்களை இறக்குமதி செய்ய ஐரோப்பிய யூனியன் கட்டுப்பாடுகளை விதித்தது. இந்த நிலையில் கதிரியக்கம் பாதித்த நீரை தனியே தொட்டி கட்டி சேமித்து வைத்திருந்த ஜப்பான் தற்போது அதை கடலில் கலக்க முடிவு செய்துள்ளது. தண்ணீரில் கதிரியக்க பாதிப்பு இல்லை என ஜப்பான் கூறும் நிலையில் சர்வதேச அளவில் இது மிகப் பெரிய எதிர்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
Share it if you like it