முதல்வர் பி.ஏ. வீட்டில் ரெய்டு: 2 ஏ.கே.47 துப்பாக்கி பறிமுதல்!

முதல்வர் பி.ஏ. வீட்டில் ரெய்டு: 2 ஏ.கே.47 துப்பாக்கி பறிமுதல்!

Share it if you like it

ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனின் உதவியாளர் வீட்டில், அமலாக்கத்துறையினர் நேற்று நடத்திய அதிரடி சோதனையில், அவரது வீட்டிலிருந்து 2 ஏ.கே. 47 ரக துப்பாக்கிகள் மற்றும் 60 குண்டுகள் கைப்பற்றப்பட்டிருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையிலான ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா மற்றும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. ஹேமந்தி சோரனின் தந்தை சிபு சோரன் மத்திய அமைச்சராக இருந்தபோது, நிலக்கரி சுரங்க ஊழல் புகார் இருக்கிறது. இதில், ஹேமந்த் சோரன் உள்ளிட்ட சிலர் மீது குற்றச்சாட்டி இருக்கிறது. இந்த சூழலில், ஹேமந்த் சோரனுக்கு உதவியாளராக இருக்கும் பங்கஜ் மிஸ்ரா, சுங்கச் சாவடி ஒதுக்கீட்டில் ஊழல் செய்ததாக போலீஸார் வழக்குத் தொடர்ந்திருக்கிறார்கள். இந்த வழக்கில், ஹேமந்த் சோரனுக்கு நெருக்கமான வேறு சிலரும் சிக்கி இருக்கிறார்கள். இவர்களுக்கும் சட்டவிரோத நிலக்கரி சுரங்க ஊழலில் தொடர்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.

இது குறித்து விசாரணை நடந்து வரும் நிலையில்தான், சட்ட விரோத பணப் பரிமாற்ற குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக, பங்கஜ் மிஸ்ரா மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களின் வீடுகள், அலுவலகங்களில் அமலாக்கத் துறையினர் நேற்று அதிரடியாக சோதனை நடத்தினர். இதில், 13.32 கோடி ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதோடு, ராஞ்சியில் உள்ள பிரேம் பிரகாஷ் என்பவரது வீட்டிலிருந்து 2 ஏ.கே. 47 ரக துப்பாக்கிகளும், 60 குண்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. இவர், ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனின் உதவியாளர் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து அமலாக்கத் துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Share it if you like it