நாங்கள் இல்லாமல் ஸ்டாலினால் ஜெயிக்க முடியாது: காங்., தலைவர் சவால்!

நாங்கள் இல்லாமல் ஸ்டாலினால் ஜெயிக்க முடியாது: காங்., தலைவர் சவால்!

Share it if you like it

காங்கிரஸ் இல்லாமல் தி.மு.க.வால் வெற்றி பெற முடியாது என காங்கிரஸ் தலைவர் கூறியிருப்பது கூட்டணி கட்சியினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2021- ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கூட்டணி அமைத்து போட்டியிட்டார். இந்த தேர்தலில், அக்கட்சி மிருக பலத்துடன் ஆட்சி அமைத்தது. அதன்பின்பு, தனிகாட்டு ராஜாவாக இன்று வரை ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார். அந்த வகையில், தனது கூட்டணி கட்சிகளை கூட ஒரு பொருட்டாக மதிக்காமல் மனம் விரும்பிய படி ஆட்சியை நடத்தி வருகிறார். இதன்காரணமாக, கூட்டணி கட்சியை சேர்ந்த தலைவர்கள் அவ்வபோது தங்களது கடும் அதிருப்தியை ஊடகங்களுக்கு தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர்.

இப்படிப்பட்ட சூழலில், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி, ’தி டிபேட்’ யூ டியூப் இணையதள ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் இவ்வாறு கூறியிருக்கிறார் ;

தி.மு.க. இல்லாமல் காங்கிரஸ் கட்சியால் வெற்றி பெற முடியுமா? என்ற கேள்வி முன்வைக்கப்படுகிறதே இதுகுறித்து, உங்கள் கருத்து என்ன என்று நெறியாளர் கேட்கிறார். இதற்கு, கே.எஸ். அழகிரி, காங்கிரஸ் இல்லாமல் தி.மு.க. வெற்றி பெற முடியுமா? கூட்டணி இல்லாமல் அக்கட்சியால் வெற்றி பெற முடியாது என்று தெரிவித்து இருக்கிறார். இக்காணொளி, தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இதனிடையே, பிரபல பத்திரிகை ஒன்றிற்கு அளித்த பேட்டியில் கே.எஸ். அழகிரி இவ்வாறு கூறினார் ;

எத்தனையோ தமிழர்கள், இஸ்லாமியர்கள் 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ளனர். அவர்களை ஏன்? விடுவிக்கவில்லை? ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதானவர்களை வெளியே நடமாட விடுவது தவறு. தி.மு.க.வுடன் கூட்டணியில் இருப்பதால் அனைத்து விவகாரங்களுக்கும் அழுத்தம் கொடுக்க முடியாது. காங்கிரஸூக்கும் தி.முக.வுக்கும் ஏராளமான முரண்பாடுகள் உள்ளன. மதச்சார்பற்ற கூட்டணி என்ற அடிப்படையில் இணைந்திருக்கிறோம் என்று தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it