காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவரின் முகநூல் பதிவு!

காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவரின் முகநூல் பதிவு!

Share it if you like it

காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அருட்செல்வப் பேரரசன் என்பவர் தனது முகநூல் பக்கத்தில் தமக்கு கிடைத்த அனுபவத்தை இவ்வாறு பதிவிட்டிருக்கிறார்.

அவரது முகநூல் பதிவு இதோ.

“இலக்கியம்” என்ற மூன்றாம் குழுவில் பங்கு பெற்ற ஒவ்வொருவரும் காசி, பிரயாகை, அயோத்தி நகரங்களுடன் தமிழகத்திற்கிருந்த தொடர்புகளைத் தெள்ளெனப் புரிந்திருப்பார்கள்.

யாத்திரையில் பங்குபெற்ற ஒவ்வொருவரும் பாரதப் பிரதமரையும், தங்களுக்கு வரவேற்பளித்து, உபசரித்த வெவ்வேறு மாநிலங்களின் அரசியல் தலைவர்களையும், கள்ளங்கபடமின்றி முழுமனத்துடன் விருந்தோம்பல் செய்த பொதுமக்களையும் போற்றிப் பாராட்டினர்.

சமயப் பாகுபாடின்றி கிறிஸ்தவர்களும், இஸ்லாமியர்களும், கட்சிப் பாகுபாடின்றி கம்யூனிஸ்டுகளும், தமிழ்த்தேசியவாதிகளுங் கூட பங்கேற்ற இந்தப் பயணத்தின் தொடக்கத்தில் வெறுப்பை உமிழ்ந்த ஒவ்வொருவரும், இறுதியில் தாங்களே அதை விழுங்க வேண்டியும் வந்தது.

நாடு முழுவதும், ஒவ்வொரு மாநிலமும், காசி தமிழ் சங்கமப் பயணிகளை வரவேற்றிருக்கையில், பயணம் செய்த களைப்புடன் திரும்பி வரும் பயணிகள் மீது, “மறியல்” என்ற பெயரில் தமிழகத்தின் (சிபிஐ[எம்]) எஸ்.எஃப்.ஐ. அமைப்பினர் வெறுப்பை உமிழ்ந்தனர். நாடு முழுவதும் தக்க பாடம் கிடைத்தும் கற்றுக் கொள்ளா மூடர்கள்தானே இந்த பகுத்தறிவு வியாதிகள்!

இந்த ஏற்பாட்டிற்குப் பதிலாக, ஒருவேளை, வடமாநிலத்தவரை நம் மதுரை, ராமேஸ்வரத்திற்கு அழைத்திருந்தால், நாம் என்ன செய்திருப்போம் என்பதை நினைத்தால், வெட்கித் தலைகுனிய வேண்டிய சாத்தியக்கூறுகளே அதிகம் தென்படுகின்றன.

இந்த வெறுப்பு மட்டுமே காலங்காலமாகத் “திராவிடம்” நமக்குத் தந்திருக்குங் கொடையாகும்.இது நிச்சயம் மெச்சத்தகுந்ததல்ல. இதுவே நீடித்திருப்பதும் நல்லதல்ல. மக்கள் தக்க பாடம் கற்பிப்பார்கள். இந்த வெறுப்பு மட்டுமே காலங்காலமாகத் “திராவிடம்” நமக்குத் தந்திருக்குங் கொடையாகும். இது நிச்சயம் மெச்சத்தகுந்ததல்ல. இதுவே நீடித்திருப்பதும் நல்லதல்ல. மக்கள் தக்க பாடம் கற்பிப்பார்கள்.

அருட்செல்வப் பேரரசன்

/https://www.facebook.com/arulselva.perarasan/posts/pfbid02r379PMdugRLZpzh4e5G1vzeLnjmRZUkV8PtDuoXicUhVbSnDAy7v7RPHFXkwbnkBl


Share it if you like it