மனு கொடுக்கச் சென்ற மூதாட்டியிடம் எரிந்து விழுந்த தி.மு.க. எம்.எல்.ஏ.: என்னய்யா இப்புடி பண்றீங்களேய்யா!

மனு கொடுக்கச் சென்ற மூதாட்டியிடம் எரிந்து விழுந்த தி.மு.க. எம்.எல்.ஏ.: என்னய்யா இப்புடி பண்றீங்களேய்யா!

Share it if you like it

கள்ளக்குறிச்சியில் மனு கொடுக்கச் சென்ற மூதாட்டியிடம் தி.மு.க. எம்.எல்.ஏ. ஒருவர் எரிந்து விழுந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகேயுள்ள வி.பி.அகரம் ஊராட்சியில் 46 லட்சம் ரூபாய் செலவில் கிராம ஊராட்சி அலுவலக கட்டடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா கடந்த இரு தினங்களுக்கு முன்பு நடந்தது. இந்நிகழ்ச்சியில் சங்கராபுரம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. உதயசூரியன் கலந்துகொண்டு அடிக்கல் நாட்டிவிட்டு, விழாவில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது, ஒரு மூதாட்டி மனுவை கொண்டு போய் எம்.எல்.ஏ. உதயசூரியனிடம் நீட்டினார்.

உடனே ஆத்திரமடைந்த எம்.எல்.ஏ., யம்மா போய் உட்காரும்மா என்று எரிந்து விழுந்தார். இதனால் மிரண்டுபோன அந்த மூதாட்டி, பின்வாங்கி வந்து அங்கு போடப்பட்டிருந்த இருக்கையில் அமர்ந்தார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், இதுகுறித்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதைக் கண்ட பலரும், தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள், அமைச்சர்களின் அராஜக போக்கை வன்மையாக கண்டித்து வருகின்றனர்.


Share it if you like it