ஃபாரின் தொழிலதிபர் தொடர்பு; குட்டை உடைத்த குலாம்: ராகுலுக்கு பா.ஜ.க. பதிலடி… அச்சத்தில் இத்தாலி குடும்பம்!

ஃபாரின் தொழிலதிபர் தொடர்பு; குட்டை உடைத்த குலாம்: ராகுலுக்கு பா.ஜ.க. பதிலடி… அச்சத்தில் இத்தாலி குடும்பம்!

Share it if you like it

நம் நாட்டின் விரும்பத்தகாத ஒரு தொழிலதிபருடன் ராகுல் காந்தி தொடர்பில் இருக்கிறார் என்று குலாம் நபி ஆசாத் கூறியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நேருவின் குடும்பத்துக்கு எதிராக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் பலர் கருத்துத் தெரிவித்து வந்தனர். இதனால், மேற்கண்ட நபர்களை கட்சியிலிருந்து கட்டம் கட்டும் வேலையில் இறங்கியது காங்கிரஸ் தலைமை. எனவே, அக்கட்சியின் மூத்த தலைவர்களான குலாம் நபி ஆசாத், ஜோதிராதித்ய சிந்தியா, கிரண் குமார் ரெட்டி, ஹிமந்த பிஸ்வா சர்மா, அனில் அந்தோணி ஆகியோர் உட்பட பலரும் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினர். இவர்களில் சிலர் பா.ஜ.க.வில் இணைந்த நிலையில், குலாம் நபி ஆசாத் புதிய கட்சியைத் தொடங்கி இருக்கிறார்.

இந்த சூழலில், காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறிய முக்கியமான 5 தலைவர்களின் பெயர்களை, அதானி பெயருடன் இணைத்து ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் சமீபத்தில் ஒரு பதிவை போட்டிருந்தார். அதில், அதானியின் ஆங்கில பெயரில் ஒவ்வொரு எழுத்துடனும், காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறிய முன்னாள் தலைவர்களான குலாம் நபி ஆசாத், ஜோதிராதித்ய சிந்தியா, கிரண் குமார் ரெட்டி, ஹிமந்த பிஸ்வா சர்மா, அனில் அந்தோணி ஆகிய 5 பேரையும் இணைத்து குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில், ஜனநாயக ஆசாத் கட்சியை தொடங்கி இருக்கும் குலாம் நபி ஆசாத், தனியார் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “தொழிலதிபர் அதானியுடன் பிரதமர் மோடி தொடர்பு வைத்திருப்பதாக ராகுல் காந்தி சொல்லிக் கொண்டே இருக்கிறார். ஆனால், ராகுலும், அவரது மொத்த குடும்பமும் நாட்டின் விரும்பத்தகாத ஒரு தொழிலதிபருடன் தொடர்பில் இருக்கிறார்கள். இதை என்னால் ஆதாரப்பூர்வமாக சொல்ல முடியும். ராகுல் காந்தி எந்தெந்த நாட்டிற்குச் செல்கிறார், அங்கெல்லாம் யார் யாரை சந்திக்கிறார்? என்று என்னால் முழுமையாகவும், ஆதாரத்துடன் தகவல் தர முடியும்.

அதேபோல, பாரத் ஜோடோ யாத்திரையால் ராகுலுக்கு செல்வாக்கு அதிகரித்து விட்டதாக சிலர் சொல்கிறார்கள். அப்படி எந்த செல்வாக்கும் ராகுலுக்கு அதிகரித்து விட்டதாக எனக்குத் தெரியவில்லை. சூரத் கோர்ட்டுக்கு ராகுல் சென்றபோது, அவரை ஒருவர் கூட வரவேற்கவில்லை. இதிலிருந்தே அவரது எம்.பி. பதவி பறிப்பை மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர் என்பது உறுதியாகி இருக்கிறது” என்று கூறியிருக்கிறார். இது காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால், அக்கட்சியினர் குலாம் நபி ஆசாத்தை வசைபாடி வருகின்றனர்.

அதேசமயம், காங்கிரஸ் கட்சிக்கு பா.ஜ.க. கண்டனத்தை தெரிவித்திருக்கிறது. குலாம் நபி ஆசாத் குற்றச்சாட்டுக்கு ராகுல் காந்தி பதிலளிக்க வேண்டும் என்று பா.ஜ.க. மூத்த தலைவர் ரவிசங்கர் பிரசாத் வலியுறுத்தி இருக்கிறார். நாட்டுக்கு எதிரான தொழிலதிபர்களின் உத்தரவின் பேரில்தான், ராகுல் காந்தி நாட்டை பலவீனப்படுத்த முயற்சிக்கிறாரா? என்று கேள்வி எழுப்பி இருக்கிறார். இதையடுத்து, பிரதமர் நரேந்திர மோடியை அதானியுடன் தொடர்புபடுத்தி கேள்வி எழுப்பும் ராகுல் காந்தியை, தற்போது பா.ஜ.க. திருப்பியடிக்க ஆரம்பித்திருக்கிறது.


Share it if you like it