பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் ஏதேனும் தவறு நடந்தால் உடனே அலறுபவர் கனிமொழி. இவரது, கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் இருவர் பெண் காவலர்களுக்கு பாலியல் சீண்டல் தந்துள்ளனர். இதுகுறித்து, அவர் ஏன்? வாய் திறக்கவில்லை என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
சென்னை விருகம்பாக்கம் தசரதபுரம் பேருந்து நிறுத்தம் அருகே, கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு தி.மு.க., சார்பில் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், கனிமொழி எம்.பி, தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி, விருகம்பாக்கம் எம்.எல்.ஏ. பிரபாகர ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அந்த வகையில், பொதுக்கூட்டம் நிறைவு கட்டத்தை எட்டியிருந்தது.
அப்போது, 129-வது வட்ட இளைஞர் அணியைச் சேர்ந்த எஸ்.பிரவீன் மற்றும் சி. ஏகாம்பரம் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த பெண் காவலர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். இதனால், அதிர்ச்சியடைந்த பெண் காவலர்கள் என்ன? செய்வது என்று தெரியாமல் கதறி அழுத்துள்ளனர். இதையடுத்து, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த மற்ற காவலர்கள் அவர்கள் இருவரையும் மடக்கி பிடித்துள்ளனர். இதையடுத்து, அவர்கள் இருவரையும் விடுவிக்க வேண்டும் என தி.மு.க. தொண்டர்கள் காவலர்களிடம் கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து, மேடையில் இருந்த தி.மு.க. எம்.எல்.ஏ. பிரபாகர ராஜா, இந்த நேரத்தில் எந்த பிரச்சனையும் வேண்டாம் என காவலர்களிடம் கேட்டு கொண்டார் என்பதுதான் கொடுமையிலும் கொடுமை.
இதனை தொடர்ந்து, பெண் காவலர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தி.மு.க. நிர்வாகிளை கட்சியை விட்டு உடனே நீக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வந்தனர். இந்நிலையில், தி.மு.க. நிர்வாகிகள் இருவரையும், கட்சியை விட்டு தற்காலிகமாக நீக்குவதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிக்கை வெளியிட்டுள்ளார். இந்த அறிக்கை, பொதுமக்களிடையே மீண்டும் கடும் கோவத்தை ஏற்படுத்தியுள்ளது.
பா.ஜ.க. ஆளும் உ.பி.யில் யாரோ ஒருவன் செய்த தவறுக்கு சென்னையில் மெழுவர்த்தி ஊர்வலம் நடத்தி நாடகம் நடத்தியவர் கனிமொழி. இவரது, கட்சியை சேர்ந்த இரண்டு நிர்வாகிகள் பெண் காவலர்களுக்கு பாலியல் சீண்டல் கொடுத்துள்ளனர். இதுகுறித்து, இன்று வரை ஏன்? வாய் திறக்கவில்லை. எப்போது, மெழுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்துவார் என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.