தி.மு.க. எம்.பி. கனிமொழி நாடாளுமன்றத்தில் கூறிய பொய்க்கு தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தக்க பதிலடியை கொடுத்துள்ளார்.
தி.மு.க. எம்.பி. கனிமொழி நேற்றைய தினம் நாடாளுமன்றத்தில் இவ்வாறு பேசினார் ; சமூக நீதி மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை தமிழகத்தை பார்த்து கற்றுக் கொள்ள வேண்டும் என பேசியிருந்தார்.
இதற்கு, தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கொடுத்த பதிலடி இதோ :
தி.மு.க.வை சேர்ந்த அரசியல்வாதிகள் தங்கள் கட்சிக் கூட்டங்கள் என்று கருதி கொண்டு பொய்களையும், பாதி உண்மைகளையும் பரப்புவதற்கு, நாடாளுமன்றத்தை பயன்படுத்தி வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் பட்டியல் சமூகத்தை சேர்ந்த சகோதர, சகோதரிகள் பயன்படுத்தும் குடிநீரில் மனித மலம் கலந்து மாசு செய்யப்பட்டது. ஒரு மாதங்களை கடந்து அதன் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
தி.மு.க. அமைச்சர் கிராம பஞ்சாயத்து பிரதிநிதியை ஜாதியை சொல்லி திட்டியிருந்தார். தேர்ந்தெடுக்கப்பட்ட கிராம பஞ்சாயத்து பிரதிநிதிகள் சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினத்தின் போது கொடிகளை ஏற்ற அனுமதிக்கப்படவில்லை.
தி.மு.க. லோக்சபா எம்.பி. டி ஆர். பாலு இந்து கோவில்களை தாம் இடித்தாக பெருமிதம் அடைந்தார். சேலத்தை சேர்ந்த தி.மு.க. பிரமுகர் பட்டியல் சமூகத்தை சேர்ந்த இளைஞரை கோவிலுக்குள் அனுமதிக்காமல் ஆபாசமாக திட்டியிருந்தார்.
கடந்த 20 மாதங்களில் தி.மு.க.வின் சமூக நீதி மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியின் இத்தகைய சாதனைகள் குறித்து பத்திரிகையில் செய்திகள் வெளிவந்தால் 20 பக்கங்களை அது நிரப்பும் என குறிப்பிட்டுள்ளார்.