மத்திய பாரதிய ஜனதா அரசின் 9 ஆண்டுகால சாதனையை விளக்கியும் திமுக ஆட்சியின் மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளை கண்டித்தும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ‘என் மண்: என் மக்கள்’ என்ற பாதயாத்திரை மேற்கொண்டுள்லார். கன்னியாகுமரி மாவட்டத்தில் பாதயாத்திரை மேற்கொண்ட அண்ணாமலை, திமுக அரசு மீது சரமாரியான குற்றச்சாட்டுகளை முன் வைத்தார். தமிழக ஜனநாயகத்திற்கு பெருமை சேர்க்கும் கன்னியாகுமரியில் திமுக அமைச்சர் மனோ தங்கராஜ் குன்றுகளைத் விழுங்கி ஏப்பம் விடுவதாக அண்ணாமலை விமர்சித்தார். கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து கனிம வளங்கள் பக்கத்து மாநிலங்களுக்கு தினமும் 600 லாரிகளில் கடத்தப்படுவதன் பின்னணியில் மனோ தங்கராஜ் இருப்பதாக புகார் எழுந்துள்ளதாகவும் அண்ணாமலை குறிப்பிட்டார்.காங்கிரஸ் ஆட்சியில் அன்று காமராஜர்,கக்கன் பொன்னப்ப நாடார் போன்ற தன்னலமற்ற தலைவர்கள் வாழ்ந்ததாகவும் தற்போது அது போன்ற தலைவர்கள் காங்கிரசில் எங்கே இருக்கிறார்கள் எனவும் அண்ணாமலை கேள்வி எழுப்பினார்.
மலைகளை விழுங்கிய திமுக அமைச்சர் – அண்ணாமலை பகிரங்க குற்றச்சாட்டு!
Share it if you like it
Share it if you like it