Share it if you like it
கரன்ட் பில் பஸ் டிக்கெட் எடுக்க வேண்டாம் என ஜேடிஎஸ் தலைவர் குமாரசாமி தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கர்நாடகாவில் கடந்த மே- 10 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தல் முடிவுகள் மே -13 ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. அந்த வகையில், காங்கிரஸ் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்தது. காங்கிரஸின் இந்த வெற்றிக்கு மிக முக்கிய காரணம் அதன் தேர்தல் வாக்குறுதிகள்தான் என அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்திருந்தனர்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில், மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் தலைவர் குமாரசாமி கர்நாடக மக்கள் யாரும் கரண்ட் பில் கட்ட வேண்டாம். பேருந்தில், யாரும் டிக்கெட் எடுக்க வேண்டாம் என கன்னட மக்களை தூண்டி விட்டுள்ளார். குமாரசாமியின் செயல் ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் தர்ம சங்கடத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
Share it if you like it