ஹிஜாப்: கல்லூரி முதல்வர்களுடன் அடிப்படைவாதிகள் வாக்குவாதம்!

ஹிஜாப்: கல்லூரி முதல்வர்களுடன் அடிப்படைவாதிகள் வாக்குவாதம்!

Share it if you like it

ஹிஜாப் அணிந்து வந்த இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்பைச் சேர்ந்த மாணவிகள், கல்லூரி முதல்வர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கர்நாடகாவில் இஸ்லாமிய அடிப்படைவாத மாணவிகள் சிலர், திடீரென பள்ளி, கல்லூரிகளுக்கு ஹிஜாப், பர்தா, புர்கா அணிந்து வந்தனர். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஹிந்து மாணவ, மாணவிகள் காவித்துண்டு அணிந்து வந்தனர். இதனால், இரு தரப்பினரிடையே மோதல் ஏற்படும் அபாயம் நிலவியது. இதையடுத்து, ஹிஜாப்பாக இருந்தாலும் சரி, காவித்துண்டாக இருந்தாலும் சரி, மத அடையாளங்களை பிரதிபலிக்கும் எந்த ஆடைகளையும் மாணவ, மாணவிகள் அணியக்கூடாது. சீருடை மட்டுமே அணிந்து வர வேண்டும் என்று மாநில அரசு உத்தரவிட்டது.

இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டதால், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்த மாநில அரசு, 144 தடை உத்தரவைுயம் பிறப்பித்தது. எனவே, மாநில அரசின் ஹிஜாப் தடையை எதிர்த்து அடிப்படைவாத அமைப்பினர் கோர்ட்டில் வழக்குத் தொடர்ந்தனர். இதை விசாரித்த நீதிபதிகள், வழக்கின் இறுதித் தீர்ப்பு வரும்வரை மத அடையாளங்களை பிரதிபலிக்கும் வகையிலான ஆடைகளை அணியக்கூடாது என்று உத்தரவிட்டதோடு, பள்ளி, கல்லூரிகளை திறக்கவும் மாநில அரசுக்கு உத்தரவிட்டது.

அதன்படி, பிப்ரவரி 14-ம் தேதி 10-ம் வகுப்பு வரையிலான பள்ளிகள் மட்டும் திறக்கப்பட்டன. ஆனாலும், அடிப்படைவாத மாணவிகள் வழக்கம்போல ஹிஜாப், பர்தா, புர்கா அணிந்து வந்தனர். அவர்களை பள்ளி நிர்வாகம் வகுப்பறைக்குள் அனுமதிக்கவில்லை. இதனால், மாணவிகளும், பெற்றோரும் ஆசிரியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர், பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் சுமுகத் தீர்வு எட்டப்படவில்லை.

இந்த நிலையில், பிப்ரவரி 16-ம் தேதி கல்லூரிகளும் திறக்கப்பட்டன. ஆனால், இஸ்லாமிய அடிப்படைவாத மாணவிகள், வேண்டுமென்றே கல்லூரிக்கு ஹிஜாப், பர்தா, புர்கா அணிந்து வந்தனர். எனவே, கோர்ட் உத்தரவுப்படி உடையணிந்து வருமாறு கூறி, அம்மாணவிகளை கல்லூரிக்குள் நுழைய அனுமதி மறுத்துவிட்டது நிர்வாகம். இதனால், கல்லூரி முதல்வர்களுடன் அடிப்படைவாதிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். குறிப்பாக, விஜயபுரா மாவட்டத்தில் இச்சம்பவம் அதிகளவில் காணப்பட்டது. மாநில அரசின் உத்தரவையும் மதிக்க மாட்டோம், பள்ளி, கல்லூரிகளின் சட்டதிட்டங்களையும் மதிக்க மாட்டோம், கோர்ட் உத்தரவையும் மதிக்கமாட்டோம் என்கிற வகையில், இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்பினர் செயல்பட்டு வருவது, கர்நாடக மாநில மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.


Share it if you like it