ஸ்டாலினை கண்டித்து பா.ஜ.க. கருப்புச் சட்டை போராட்டம்!

ஸ்டாலினை கண்டித்து பா.ஜ.க. கருப்புச் சட்டை போராட்டம்!

Share it if you like it

பெங்களூருவில் நடந்த எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டத்தில் கலந்துகொண்ட தமிழக முதல்வர் ஸ்டாலின், மேகதாது அணை விவகாரம் குறித்து பேசாதது ஏன் என்று கேள்வி எழுப்பி இருக்கும் பா.ஜ.க.வினர், கருப்புச் சட்டை அணிந்து எதிர்ப்பை பதிவு செய்திருக்கிறார்கள்.

கர்நாடக மாநிலத்தில் ஆட்சி அமைத்திருக்கும் காங்கிரஸ் கட்சி காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டப்படும் என்று அறிவித்திருக்கிறது. மேலும், அணை கட்ட 900 கோடி ரூபாய் ஒதுக்குவதாகவும் அறிவித்திருக்கிறது. ஆனால், இதை கண்டித்து தி.மு.க. தலைவரும், தமிழக முதல்வருமான ஸ்டாலின் எவ்வித கண்டனமும் தெரிவிக்கவில்லை. அதேபோல, தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரியும் கண்டனம் தெரிவிக்கவில்லை. எனவே, கர்நாடக மாநிலம் பெங்களூருவில் ஜூலை 13, 14-ம் தேதிகளில் நடக்கவிருந்த எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் கலந்துகொள்ளக் கூடாது என்று பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வலியுறுத்தினார். மேலும், மீறி கலந்துகொண்டால் கோட்டையை முற்றுகையிடுவோம் என்று அறிவித்தார்.

இதனிடையே, சில பல காரணங்களால் எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டம் ரத்து செய்யப்பட்டது. இது தி.மு.க. எதிர்ப்புதான் காரணம் என்றூ கூறப்பட்டது. ஆனால், திட்டமிட்டபடியே அதே பெங்களூருவில் ஜூலை 18-ம் தேதி எதிர்க்கட்சிகள் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதில், ஸ்டாலின் கலந்துகொள்வதாக அறிவித்திருந்தார். இதை கண்டித்து, பா.ஜ.க.வினர் கருப்பு சட்டை அணிந்து எதிர்ப்பு தெரிவிக்கும் இயக்கத்தை நடத்தி வருகின்றனர். அந்தவகையில், சென்னையில் பா.ஜ.க. செய்தித் தொடர்பாளரும், சட்டப் பிரிவின் மாநில செயலாளருமான அஸ்வத்தாமன் தலைமையில் இன்று பா.ஜ.க.வினர் கருப்பு சட்டை அணிந்து தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.


Share it if you like it