புழல் சிறையில்தான் ஆட்சி நடத்த வேண்டும்… ஸ்டாலினை பங்கம் செய்த பழ.கருப்பையா!

புழல் சிறையில்தான் ஆட்சி நடத்த வேண்டும்… ஸ்டாலினை பங்கம் செய்த பழ.கருப்பையா!

Share it if you like it

எல்லோரும் இலாகா இல்லாத அமைச்சர்களாகி விடுவார்கள். அவர்களுடன் நீங்களும் உள்ளே சென்று புழல் சிறையில் தமிழக அரசை நடத்துங்கள் என்று ஸ்டாலினை மரண பங்கம் செய்திருக்கிறார் மாஜி எம்.எல்.ஏ. பழ.கருப்பையா.

அரசியல்வாதி, எழுத்தாளர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகத் திறமை வாய்ந்தவர் பழ.கருப்பையா. மறைந்த முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் 2010-ம் ஆண்டு அ.தி.மு.க.வில் இணைந்தார். பின்னர், 2011-ம் ஆண்டு அ.தி.மு.க. சார்பில் துறைமுகம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்று எம்.எல்.ஏ.வாக தேர்வு செய்யப்பட்டார். இதன் பிறகு, துக்ளக் ஆண்டு விழாவில் அ.தி.மு.க.வை விமர்சித்து பேசியதால், கட்சியிலிருந்து ஜெயலலிதாவால் நீக்கப்பட்டார். பிறகு, 2016-ம் ஆண்டு கருணாநிதி முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தார்.

ஆனால், கருணாநிதி மறைவுக்குப் பிறகு தலைமை பொறுப்பேற்ற ஸ்டாலினின் நடவடிக்கைகளால் வெறுப்படைந்தவர், அக்கட்சியிலிருந்து 2019-ம் ஆண்டு விலகினார். பின்னர், நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்து 2021-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தி.நகர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தவர், 2023-ம் ஆண்டு தமிழ்நாடு தன்னுரிமைக் கழகம் என்கிற பெயரில் புதிய கட்சியைத் தொடங்கினார். இவர்தான், புழல் சிறையில் ஆட்சியை நடத்தும்படி கூறி, முதல்வர் ஸ்டாலினை பங்கம் செய்திருக்கிறார்.

இதுகுறித்து தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்திருக்கும் பேட்டியில், “ஸ்டாலினுக்கு நான் ஒரு யோசனை சொல்கிறேன். புழல் சிறையை கருணாநிதி சிறை என்று மாற்றுங்கள். ஏனெனில், தமிழகத்தில் உள்ள அனைத்து அமைச்சர்களும் இலாகா இல்லாத அமைச்சர்களாகி புழல் சிறைக்குச் சென்று விடுவார்கள். ஆகவே, நீங்களும் உள்ளே சென்று இலாகா இல்லாத அமைச்சர்களை வைத்துக் கொண்டு தமிழக அரசை நடத்துங்கள். அதுதான் தமிழகத்தில் நடக்கப் போகிறது. அதன் பிறகுதான் மாறுதல் உண்டாகும்” என்று கூறியிருக்கிறார்.

இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


Share it if you like it