பாட புத்தகங்களில் கருணாநிதியா ? அப்படி என்ன செய்தார் கருணாநிதி ஊழலை தவிர ?

பாட புத்தகங்களில் கருணாநிதியா ? அப்படி என்ன செய்தார் கருணாநிதி ஊழலை தவிர ?

Share it if you like it

10ம் வகுப்பு புத்தகத்தில் முன்னாள் முதல்வர், தி மு க தலைவர் கருணாநிதியின் வரலாறு பன்முக கலைஞர் என்ற தலைப்பில் கலை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு பாஜக மாநில தலைவர் நாராயணன் திருப்பதி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் எக்ஸ் பதிவில்,

10ம் வகுப்பு புத்தகத்தில் முன்னாள் முதல்வர், தி மு க தலைவர் கருணாநிதியின் வரலாறு பன்முக கலைஞர் என்ற தலைப்பில் கலை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. வரலாறு என்பது உண்மையை மட்டுமே பதிவு செய்யக்கூடியதாக இருக்க வேண்டும். மேலும், ஆளும் கட்சியாக இருக்கும் போது தங்களின் தலைவர் குறித்த நேர்மறையான விவரங்களை பாடப்புத்தகங்களில் சேர்ப்பவர்கள், பிற்காலத்தில் வேறு ஒரு கட்சி ஆட்சிக்கு வரும் நிலையில், அந்த பாடத்தை நீக்கியோ அல்லது நீக்காமலோ, அந்த அரசியல் தலைவரின் மறுபக்கம் என்ற பாடத்தை எதிர்மறையாக பதிவு செய்து விட்டால் அந்த தலைவரின் புகழுக்கு களங்கம் ஏற்பட்டு விடாதா? அந்த கட்சியின் நிலை என்னவாகும் என்பதை சற்றே சிந்தித்து பார்க்க வேண்டும். அதிகாரம் உள்ளது என்பதற்காக தங்கள் தலைவரின் வரலாற்றை பதிவு செய்வது அதிகார துஷ்பிரயோகமே. பல்வேறு அரசியல் தலைவர்கள் குறித்து பல்வேறு தளங்களில் நல்லதையும், கெட்டதையும் கூட பதிவு செய்துள்ளார்கள். கண்ணதாசனின் ‘வனவாசம்’ புத்தகம் ஒரு பெரிய உதாரணம் என்பதை தொடர்புடையவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். அரசியல் அதிகாரத்தை முறையாக செலுத்த வேண்டும், இல்லையேல் அது நம்மையே திருப்பி தாக்கும் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

நம் நாட்டுக்காக போராடி தன் இன்னுயிரை இழந்தவர்கள் என்று கணக்கிட்டால் நாள் முழுவதும் சொல்லலாம். அந்த அளவிற்கு பட்டியல் நீண்டு கொண்டே போகும். நாட்டிற்காக இன்னுயிரை அர்ப்பணித்த பல சுதந்திர போராட்ட தியாகிகளின் பெயர்கள் கூட பாட புத்தகத்தில் இடம் பெறவில்லை.

பாடபுத்தங்களில் இடம் பெரும் அளவிற்கு கருணாநிதி தமிழ்நாட்டிற்க்கு என்ன செய்தார் என்று கேட்டால் அதற்கு விடை இல்லை. மக்களின் வரிப்பணத்தை சுரண்டி சொத்து சேர்த்து வைத்ததும் இரண்டு மூன்று பெண்களை மனைவியாக்கி கொள்வதும் கோடி கோடியாய் கொள்ளை அடித்ததும் பெண்களை ஆபாசமாக பேசியதை தவிர வேறென்ன செய்துள்ளார். ஒருவேளை திமுகவினர் இதனைத்தான் பெரிய சாதனையாக சொல்கிறார்களோ என்னவோ ? ஆட்சி தன் கைகளில் இருக்கிறதென்று ஆடாத ஆட்டமெல்லாம் திமுகவினர் ஆடுகின்றனர். ஒருவேளை ஸ்டாலின் பிரதமராக இருந்திருந்தால் கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது கூட அறிவித்திருப்பார். இவ்வாறு சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.


Share it if you like it