பேனா சிலை தமிழகத்தின் அவமானம்: பா.ஜ.க. சீனிவாசன் ஆவேசம்!

பேனா சிலை தமிழகத்தின் அவமானம்: பா.ஜ.க. சீனிவாசன் ஆவேசம்!

Share it if you like it

திருவள்ளுவர் சிலை 133 அடி உயரமாக இருப்பதால், அதைவிட உயரமாக 134 அடியில் பேனா சிலையை அமைக்க முடிவு செய்திருக்கிறார்கள். திருவள்ளுவரை விட கருணாநிதி உயர்ந்தவர் என்பதுபோல காட்ட நடக்கும் இந்த முயற்சி மிகவும் அவமானகரமானது என்று பா.ஜ.க.வைச் சேர்ந்த பேராசிரியர் சீனிவாசன் கூறியிருக்கிறார்.

மறைந்த தி.மு.க. தலைவரும், தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான கருணாநிதிக்கு, மெரினா கடற்கரையில் 81 கோடி ரூபாய் செலவில் நினைவிடம் அமைக்கப்படும் என்று, அக்கட்சியின் தலைவரும், தமிழக முதல்வருமான ஸ்டாலின் சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் அறிவித்தார். உதயசூரியன் வடிவிலான இந்த நினைவிடத்தில், கருணாநிதியின் பேனாவை நினைவுகூரும் வகையில், கடலுக்குள் 134 அடி உயரத்துக்கு பேனா வடிவிலான சிலை ஒன்றும் அமைக்கப்படுகிறது. இந்த பேனா சிலையை சென்றடையும் வகையில், கடற்கரையிலிருந்து 650ம மீட்டர் தொலைவுக்கு பாலம் ஒன்றும் அமைக்கப்படுகிறது.

இந்த நிலையில், மேற்படி நினைவிடம் அமைப்பது தொடர்பாக, தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சார்பில்ல பொதுமக்களின் கருத்துக்கேட்புக் கூட்டம் ஜனவரி 31-ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த சூழலில்தான், திருவள்ளுவர் சிலையை விட உயரமாக கருணாநிதியின் பேனா நினைவிடம் அமைப்பது அவமானம் என்று பா.ஜ.க. மாநில பொதுச்செயலாளர் பேராசிரியர் இராம.சீனிவாசன் கூறியிருக்கிறார். இதுகுறித்த பா.ஜ.க. நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய இராம.சீனிவாசன், “தமிழக அரசுக்கு கருணாநிதியின் பேனாவுக்கு சிலை வைக்கப்போவதாக அறிவித்திருக்கிறது. ஆனால், அந்த சிலையை கன்னியாகுமரியில் இருக்கும் 133 அடி உயர திருவள்ளுவர் சிலையைவிட உயரமாக 134 அடியில் வைக்க முடிவு செய்திருப்பதுதான் அவமானம். அப்படியானால், திருவள்ளுவரை விட உயர்ந்தவரா கருணாநிதி.

கவிஞர் கண்ணதாசன்கூட கம்பரை காவியத்தாயின் மூத்தமகனாகவும், தன்னை இளையமகனாகவும் கருதி பாட்டெழுதினார். இதுதானே ஹிந்து தர்மம். மகாராஷ்டிராவில் சிவசேனா ஆட்சி இருந்தது. நான்தான் பெரிய ஆள் என்று நினைத்தார் உத்தவ் தாக்கரே. தற்போதும் சிவசேனா ஆட்சிதான் இருக்கிறது. ஆனால், உத்தவ் தாக்கரே முதல்வராக இல்லை. அதே நிலை தமிழ்நாட்டிலும் ஏற்படும். தற்போது தி.மு.க. ஆட்சி நடக்கிறது. அதேபோல, தி.மு.க. ஆட்சிதான் பின்னரும் நடக்கும். ஆனால், ஸ்டாலின் முதல்வராக இருக்க மாட்டார். இன்னும் 3 ஆண்டுகளில் கட்சியும் மாறும், காட்சியும் மாறும்” என்று ஆவேசமாகப் பேசியிருக்கிறார். இந்த காணொளிதான் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.!


Share it if you like it