விரிசல் விட்ட வீடு… போராடிய தம்பதி… கான்கிரீட் கலவையைக் கொட்டி கான்ட்ராக்டர் அராஜகம்!

விரிசல் விட்ட வீடு… போராடிய தம்பதி… கான்கிரீட் கலவையைக் கொட்டி கான்ட்ராக்டர் அராஜகம்!

Share it if you like it

கரூரில் கழிவுநீர் வடிகாலுக்கு தோண்டிய பள்ளத்தால் வீடு விட்டதால், கால்வாயில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்ட தம்பதி மீது கான்கிரீட் கலவையை கொட்டி கான்ட்ராக்டர் அராஜகத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கரூர் மாநகராட்சி பகுதியான ஜெ.ஜெ.நகர் குடியிருப்புப் பகுதியில், பாதாள சாக்கடை கட்டுமானப் பணிகள் நடந்து வருகிறது. இதற்காக, சாலை ஓரங்களில் பள்ளம் தோண்டப்பட்டது. அந்த வகையில், தனியார் பள்ளி ஆசிரியரான பாலச்சந்தர், கோமதி தம்பதியின் வீட்டை ஒட்டி பள்ளம் தோண்டியதால், அவரது வீட்டின் பக்கவாட்டுச் சுவரில் விரிசல் ஏற்பட்டது. எனவே, கான்கிரீட் கலவையை வைத்து, விரிசலை சரிசெய்து தருமாறு பாலச்சந்தர் தம்பதியினர் கான்ட்ராக்டரிடம் கேட்டிருக்கிறார்கள். அதற்கு அந்த கான்ட்ராக்டரோ, 43,000 ரூபாய் கொடுத்தால் சரிசெய்து தருவதாகக் கூறியிருக்கிறார். இதில் இரு தரப்பிருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதையடுத்து, மாநகராட்சி கவுன்சிலர் பூபதி, இன்ஜினீயர் ரவி ஆகியோர், பாலச்சந்தர் தம்பதியிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர், கான்ட்ராக்டரிடம், பாலச்சந்தர் வீடு உள்ளிட்ட சுற்றியுள்ள இடங்களில் விரைவில் பணிகளை முடிக்கும்படி உத்தரவிட்டுச் சென்றனர். இதைத் தொடர்ந்து, கான்கிரீட் அமைக்கும் பணி மீண்டும் நடந்தது. ஆனால், பாலச்சந்தர் வீட்டின் முன்பு மட்டும் கான்கிரீட் கலவையை கொட்டாமல் மற்றி இடங்களில் கழிவுநீர் வாய்க்கால் அமைத்தனர். இதை கண்டித்து பாலச்சந்தர், கோமதி தம்பதி கழிவுநீர் வடிகாலுக்கு தோண்டப்பட்டிருந்த பள்ளத்தில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் ஆத்திரமடைந்த கான்ட்ராக்டர், பாலச்சந்தர், கோமதி தம்பதி மீதும் கான்க்ரீட் கலவையை கொட்டும்படி உத்தரவிடவே, பணியாட்களும் கலவையைக் கொட்டினர். இதனால் தம்பதியர் பயத்தில் அலறினார். இத்தகவல் மாநகராட்சி அதிகாரிகளுக்கு தெரியவரவே, சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர், தம்பதியிடம் பேச்சுவார்த்தை நடத்தியதோடு, அவர்களது வீட்டின் பக்கவாட்டிலும் கான்கிரீட் கலவை அமைத்து கழிவுநீர் கால்வாய் கட்டித் தரப்படும் என்று உறுதியளித்தனர். இதன் பிறகு, தம்பதியினர் பள்ளத்தை விட்டு வெளியே வந்தனர். இக்காட்சிகள் அனைத்தையும் அங்கிருந்தவர்கள் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்து விட்டனர். இந்த வீடியோதான் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

தி.மு.க. ஆட்சியில் இன்னும் என்னென்ன அக்கிரமங்கள் எல்லாம் நடக்கப் போகிறதோ என்று மக்கள் புலம்பி வருகிறார்கள்.


Share it if you like it