வடமாநில தொழிலாளர்கள் குறித்து நடிகை கஸ்தூரி தெரிவித்து இருக்கும் கருத்து பொதுமக்களிடையே பேசுப்பொருளாக மாறியுள்ளது.
பிரபல நடிகை, எழுத்தாளர், பேச்சாளர், சமூக செயற்பாட்டாளர் என பன்முகதன்மை கொண்டவர் நடிகை கஸ்தூரி. இவர், ஆளும் தி.மு.க. அரசின் அவலங்களை தொடர்ந்து சுட்டிகாட்ட கூடியவர். இதனால், கழக கண்மணிகளின் தொடர் தாக்குதலை சந்தித்து வருகிறார்.
இந்த நிலையில், தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்பட்டு வருகின்றனர் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனை தொடர்ந்து, இச்சம்பவம் தற்போது தமிழகத்தில் பேசுப்பொருளாக மாறியுள்ளது.
இப்படிப்பட்ட சூழலில், நடிகை கஸ்தூரி தனது ட்விட்டர் பக்கத்தில், வடநாட்டவர்களை தமிழர்கள் தாக்குகிறார்கள் என்பதெல்லாம் மிகை. இது வந்தோரை வாழவைக்கும் தமிழ்நாடு. தெலுங்கர், வடுகர், மலையாளி, மைசூர் என யாராயிருந்தாலும், திருட்டு ரயிலே ஏறி வந்தாலும் அரியணையில் ஏற்றி அழகு பார்ப்போமேயன்றி அடித்து துரத்துவதில்லை என குறிப்பிட்டுள்ளார்.