தெலங்கானா பி.ஆர்.எஸ். கட்சிக்கு பெப்பே… காங்கிரஸில் இணைந்த மாஜி எம்.எல்.ஏ.க்கள்… அதிர்ச்சியில் கே.சி.ஆர்.!

தெலங்கானா பி.ஆர்.எஸ். கட்சிக்கு பெப்பே… காங்கிரஸில் இணைந்த மாஜி எம்.எல்.ஏ.க்கள்… அதிர்ச்சியில் கே.சி.ஆர்.!

Share it if you like it

தெலங்கானாவில் பி.ஆர்.எஸ். கட்சியைச் சேர்ந்த மாஜி எம்.எல்.ஏ.க்கள் 12-க்கும் மேற்பட்டோர், அக்கட்சியிலிருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்திருக்கிறார்கள். இது அக்கட்சியின் தலைவர் கே.சி.சந்திரசேகர ராவுக்கு பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.

தெலங்கானா மாநிலத்தில் வருகிற டிசம்பர் மாதம் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதையடுத்து, அகில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர், தெலங்கானா மாநில காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளுடன் டெல்லியில் ஆலோசனை நடத்தினர். இக்கூட்டத்தில் தெலங்கானாவின் பாரத ராஷ்டிர சமிதி (பி.ஆர்.எஸ்) கட்சியைச் சேர்ந்த 12-க்கும் மேற்பட்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் காங்கிரஸில் தங்களை இணைத்துக் கொண்டனர். இவர்களில் முன்னாள் எம்.பி. பொங்குலேடி ஸ்ரீனிவாஸ் ரெட்டி, முன்னாள் அமைச்சர் ஜூபல்லி கிருஷ்ணராவ், முன்னாள் எம்.எல்.ஏ-க்கள் பன்யம் வெங்கடேஸ்வரலு, கோரம் கனகய்யா, கோட்டா ராம் பாபு, பி.ஆர்.எஸ் எம்.எல்.சி நர்சா ரெட்டியின் மகன் ராகேஷ் ரெட்டி உள்ளிட்டோர் அடங்குவர்.

தெலங்கானாவில் பி.ஆர்.எஸ். கட்சிக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் பனிப்போர் நிலவி வரும் நிலையில், இச்சம்பவத்தால் இரு தரப்பினருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டிருக்கிறது. மேலும், ஒய்.எஸ்.ஆர். தெலங்கானா கட்சியின் தலைவரும், ஒய்.எஸ்.ஆர்.ரெட்டியின் மகளும், ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் சகோதரியுமான ஷர்மிளா, எதிர்வரும் தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைக்கப்போவதாகத் தெரிவித்திருக்கிறார். இந்த சூழலில், பி.ஆர்.எஸ். கட்சியைச் சேர்ந்த 12-க்கும் மேற்பட்ட மாஜி எம்.எல்.ஏ.க்கள், அமைச்சர்கள், எம்.பி.க்கள் காங்கிரஸ் கட்சியில் இணைந்திருப்பதால், கே.சி.ஆர். 3-வது முறையாக முதல்வராகவது கடினம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.


Share it if you like it