ஹூசைன், சம்சுதீனால் அடித்துக் கொலை: ஆதிவாசி மது வீட்டில் கேரள கவர்னர்!

ஹூசைன், சம்சுதீனால் அடித்துக் கொலை: ஆதிவாசி மது வீட்டில் கேரள கவர்னர்!

Share it if you like it

கேரளாவில் பசிக்காக கடையில் இருந்து உணவு திருடியதால் அடித்துக் கொலை செய்யப்பட்ட ஆதிவாசியின் வீட்டுக்கு கவர்னர் சென்று ஆறுதல் கூறியிருக்கிறார்.

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் சிட்டக்கி பகுதியில் அமைந்திருக்கிறது அட்டப்பாடி கிராமம். இங்கு ஆதிவாசி பழங்குடியின மக்கள் வசித்து வருகிறார்கள். இக்கிராமத்தைச் சேர்ந்த ஆதிவாசி மது, கடந்த 2018-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 22-ம் தேதி முக்காலி பகுதிக்கு வந்திருக்கிறார். அப்போது, அகோர பசியாக இருக்கவே, அங்கிருந்த கடையில் இருந்து உணவை எடுத்து சாப்பிட்டிருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி வியாபாரிகள், கார் டிரைவர்கள் முகமது ஹுசைன், சம்சுதீன், முனீர் உள்ளிட்ட 16 பேர் சேர்ந்து மதுவை அடித்தே கொலை செய்தனர். இந்த வழக்கில் அப்பகுதி முதல் குற்றவாளியான ஹுசைன், 3-வது குற்றவாளியான சம்சுதீன், 16-வது குற்றவாளியான முனீர் ஆகியோர் சேர்ந்து மதுவை தாக்கியதாக குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டிருக்கிறது.

இந்த வழக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது. இவ்வழக்கில் சாட்சிகளாக இருக்கும் பலரும் கோர்ட்டில் வாக்குமூலத்தை மாற்றிக் கூறி வருகின்றனர். காரணம், சாட்சிகள் மிரட்டப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. இதுகுறித்து மதுவின் குடும்பத்தினர் தொடர்ந்து புகார் கூறி வருகின்றனர். இதுபற்றி மதுவின் தாய் மல்லி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கும் மனு அனுப்பி இருந்தார். அந்த மனுவில், “மது வழக்கில் சாட்சிகள் பல்டியடித்து வரும் நிலையில், மத்திய அரசு உதவ வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இந்த நிலையில்தான், கேரள கவர்னர் ஆரிப் முகமதுகான், திடீரென நேற்று மதுவின் வீட்டுக்கே சென்று அவரது குடும்பத்தினரை சந்தித்தார். அப்போது, அவரது தாய் மல்லியிடம் `மதுவுக்கு நிச்சயம் நீதி கிடைக்கும்’ எனவும், மதுவின் குடும்பத்தினரின் வேதனையில் பங்கெடுப்பதாகவும் தெரிவித்தார். மேலும், மதுவின் குடும்பத்தினர் சில கோரிக்கைகளை முன்வைத்தனர். அதை எழுத்துப்பூர்வமாக அளிக்கும்படி கூறியதாக கவர்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். கவர்னர் வருகையால் மதுவின் மரணத்துக்கு நீதி கிடைக்கும் என நம்புவதாக மதுவின் சகோதரி சரசு கூறியிருக்கிறார்.


Share it if you like it