கேரளாவில் மலப்புரம் அங்காடிபுரம் ஸ்ரீதிருமாந்தம்குன் கோயில் அலுவலக கட்டடத்திற்கு மசூதிக்கு அடிக்கும் பச்சை பெயின்ட் அடித்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதற்கு ஹிந்துக்கள் கடும் எதிர்ப்பை பதிவு செய்திருக்கிறார்கள்.
கேரளாவிலுள்ள 3 முக்கியமான பத்ரகாளி கோயில்களில் திருமந்தம்குன் பகவதி கோயிலும் ஒன்று. இக்கோவிலின் புகழ்பெற்ற பூரம் விழா மார்ச் 28 முதல் ஏப்ரல் 7-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இவ்விழாவையொட்டி, புதிய நிர்வாகக் குழு அமைக்கப்பட்டிருக்கிறது. இக்குழுவில், கேரளாவைச் சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.பி. அப்துஸ் சமத் சமதானி, மாவட்ட பஞ்சாயத்துத் தலைவர் ரபீக்கா, மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர் ஷஹர்பான், கிராம பஞ்சாயத்து தலைவர் சயீதா, மஞ்சளாம்குழி எம்.எல்.ஏ. அலி ஆகியோர் இடம் பெற்றிருக்கின்றனர்.
இந்த நிலையில், பூரம் விழாவையொட்டி திருமந்தம்குன் பகவதி அம்மன் கோயிலுக்கு புதிதாக பெயின்ட் அடிக்கப்பட்டது. இதில்தான் மசூதிக்கு அடிக்கும் பச்சை கலர் பெயின்டை அடித்திருக்கிறார்கள். பொதுவாக, ஹிந்து கோயில்களுக்கு அடர் காவி வர்ணம்தான் பூசப்படுவது வழக்கம். ஆனால், காவி நிறத்துக்கு கேரள அரசு தடை விதித்திருக்கிறது. இப்படிப்பட்ட நிலையில், ஹிந்து கோயிலுக்கு இஸ்லாமியர்களின் மசூதிக்கு பூசப்படும் பச்சை வர்ணத்தை அடித்திருக்கிறார்கள்.
இதையடுத்து, இக்கோயிலின் படத்தை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்திருக்கும் ஹிந்து ஐக்கிய வேதி கட்சியின் மாநிலத் தலைவர் சசிகலா, கடும் கண்டனத்தை பதிவு செய்திருக்கிறார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த ஹிந்துக்கள் கேரள கம்யூனிஸ்ட் அரசை வசைபாடி வருகின்றனர்.