400 ஆண்டு பழமையான மடம் இடிப்பு: தி.மு.க. அட்டூழியம்!

400 ஆண்டு பழமையான மடம் இடிப்பு: தி.மு.க. அட்டூழியம்!

Share it if you like it

திருவண்ணாமலையில் 400 ஆண்டுகள் பழமையான மடத்தை விடியா தி.மு.க. அரசு இடித்திருப்பது, பக்தர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகேயுள்ள சென்னசமுத்திரத்தைச் சேர்ந்தவர் அம்மணி அம்மாள். 17-ம் நூற்றாண்டில் வாழ்ந்த இவர், ஒரு பெண் சித்தர் ஆவார். அப்போது, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலின் வடக்கு கோபுரம் பாதி மட்டுமே கட்டப்பட்ட நிலையில் இருந்தது. இதைக் கண்ட அவர், பக்தர்கள் மற்றும் செல்வந்தர்களின் உதவியை நாடி கோபுரத்தை கட்டி முடித்தார். இதனால்தான், வடக்கு கோபுரம் அம்மனி அம்மன் கோபுரம் என்று அழைக்கப்படுகிறது. மேலும், இவர் அருணாசலேஸ்வரர் கோயிலுக்கு வடக்கு புறம், 108 துாண்களுடன் கூடிய மடம் ஒன்றை கட்டி, அங்கேயே தங்கி விட்டார்.

பின்னர், அம்மணி அம்மாள் 17-ம் நுாற்றாண்டின் இறுதியில் ஈசான்ய லிங்கம் எதிரே ஜீவ சமாதி அடைந்தார். இதையடுத்து, அந்த மடத்தை அவரது சீடர்கள் பராமரித்து வந்தனர். அதேசமயம், கடந்த 30 ஆண்டுகளாக மடத்தை முறையாக பராமரிக்க ஆட்கள் இல்லை. இதனால், சில தனி நபர்கள் மடத்தை ஆக்கிரமித்து விட்டனர். இதை மீட்க, 1976 முதல் ஹிந்து அமைப்புகள், சமூக ஆர்வலர்கள், நீதிமன்றத்தில் போராடினர். இதைத் தொடரந்து, ஹிந்து சமய அறநிலையத்துறையிடம் மடம் ஒப்படைக்கப்பட்டு, அருணாசலேஸ்வரர் கோயில் நிர்வாகம் பராமரிக்க உத்தரவிடப்பட்டது.

இந்த சூழலில், மடத்தின் இடத்தில் சுமார் 3,800 சதுர அடியை பா.ஜ.க. ஆன்மிகம், கோயில் மேம்பாட்டு பிரிவு மாநில துணைத் தலைவர் சங்கர் ஆக்கிரமித்து, வீடு மற்றும் கார் ஷெட் கட்டியிருந்தார். இதை அகற்ற முடிவு செய்த கோயில் நிர்வாகம், திருவண்ணாமலை சார்பு நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. இதன் தொடர்ச்சியாக, ஆக்கிரமிப்பை அகற்றி மடத்தை பாதுகாக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, சங்கரின் வீடு, கார் ஷெட் அகற்றப்பட்டது. ஆனால், திடீரென அம்மணி அம்மன் மடமும் இடிக்கப்பட்டதுதான் பக்தர்களை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.

மடம் இடிக்கப்படுவதை அறிந்த ஹிந்து முன்னணியினரும், அம்மணி அம்மாள் பக்தர்களும் அப்பணியை தடுத்து நிறுத்தினர். ஆனால், அதற்குள் 70 சதவிகித கட்டடத்தை இடித்து விட்டனர். இதையடுத்து, பாதி இடிக்கப்பட்ட கட்டடத்தின் மீது அமர்ந்து ஹிந்து முன்னணி அமைப்பினர் தர்ணாவில் ஈடுபட்டனர். அப்போது, நீதிமன்ற உத்தரவை மீறி, 400 ஆண்டு பழமையான நல்ல நிலையிலுள்ள மடத்தை இடித்து, புராதனத்தை அழிக்கும் பணியில் ஈடுபட்ட அறநிலையத்துறையை கண்டித்து கோஷம் எழுப்பினர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்டுத்தி இருக்கிறது.


Share it if you like it