பொதுவாக ஒரு கட்சியிலிருந்து இன்னொரு கட்சிக்கு ஆட்களை தூக்குவதுதான் வழக்கம். ஆனால், கேரளாவில் கட்சியோட அலுவலகத்தையும் சேர்த்து தூக்கிய சம்பவம் அரங்கேறி இருக்கிறது.
கேரளாவை பொறுத்தவரை, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் மட்டுமே மாறி மாறி ஆட்சி அமைத்து வருகின்றன. பா.ஜ.க. தற்போதுதான் குறிப்பிட்டத்தக்க வளர்ச்சியை பெற்று வருகிறது. இதன் தொடர்ச்சியாக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளில் இருந்து முக்கிய நிர்வாகிகளும், தொண்டர்களும் பா.ஜ.க.வில் இணைந்து வருகின்றனர். இந்த சூழலில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவனந்தபுரம் மாவட்டம் கோவளம் ஏரியா கமிட்டியின் பொறுப்பாளர், தனது ஆதரவாளர்களுடன் பா.ஜ.க.வில் இணைந்திருக்கிறார்.
இதில் ஹைலைட் என்னவென்றால், மேற்கண்ட ஏரியா பொறுப்பாளர் தனது சொந்த செலவில் ஒரு கட்டடத்தை பிடித்து கட்சி அலுவலகமாக செயல்படுத்தி வந்தார். அவர் கட்சி மாறியதால், அந்த அலுவலகத்திலும் காட்சிகள் மாறின. மேற்கண்ட அலுவலகம் பா.ஜ.க. கட்சி அலுவலகமாக மாற்றப்பட்டது. இதையடுத்து, அக்கட்சி அலுவலகத்தில் வரையப்பட்டிருந்த சேகுவாரா படத்தை அழித்து விட்டு தாமரை சின்னத்தை வரைந்திருக்கிறார்கள். இச்சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இக்காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.