மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: ‘காம்ரேடு’ கவுன்சிலர் மீது பகீர் புகார்!

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: ‘காம்ரேடு’ கவுன்சிலர் மீது பகீர் புகார்!

Share it if you like it

கடந்த 30 வருடங்களாக தன்னிடம் படித்த மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக, கம்யூனிஸ்ட் கவுன்சிலர் மீது பகீர் புகார் கிளம்பி இருக்கிறது.

கேரளாவை ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர் கே.வி.சசிக்குமார். மலப்புரத்திலுள்ள பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்தவர். சமீபத்தில் பணியில் இருந்து ஓய்வுபெற்றிருக்கும். இவர், தற்போது மலப்புரம் நகராட்சி கவுன்சிலராக இருக்கிறார். இவர், தனது 30 ஆண்டுகால ஆசிரியர் பணி குறித்து முகநூலில் ஒரு பதிவை வெளியிட்டிருந்தார். இந்த பதிவுக்கு பதிலளித்திருந்த மாணவிகளை பலரும் தங்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதை சுட்டிக் காட்டி இருக்கின்றனர். முன்னாள் மாணவி ஒருவர், மிகவும் துணிச்சலாக அந்த ஆசிரியரால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக கருத்துத் தெரிவித்திருக்கிறார்.

குறிப்பாக, மாணவிகள் பலரும் “கடந்த 30 வருடங்களாக பள்ளியில் 9 வயது முதல் 16 வயது வரையிலான சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார் கே.வி.சசிக்குமார். நம்மில் பலரும் இதற்கு பலியாகியிருக்கிறோம்” என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். எனினும், கே.வி.சசிகுமாரின் நடத்தை குறித்து பல மாணவிகளின் பெற்றோர்கள் புகார் அளித்தும் பள்ளி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. மேலும், 2019-ல் கூட புகார்கள் பதிவு செய்யப்பட்டு நெறிமுறைக் குழு வரை புகார்கள் சென்றன. ஆனால், அந்த வயதில் பல மாணவிகளால் பதில் சொல்ல முடியாமல், பல சமயங்களில் அமைதியாக சகித்துக்கொள்ள வேண்டியிருந்தது. அதேசமயம், இந்த பாலியல் தொல்லையால் குழந்தைகள் நீண்ட நாட்களாக கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கின்றனனர்.

இந்த குற்றச்சாட்டு சமூக வலைதளங்களில் வைரலானது. இதையடுத்து முன்னாள் மாணவர்கள் சிலர், ஆசிரியர் சசிக்குமார் மீது போலீஸில் புகார் அளித்தனர். இத்தொடர்ந்து, மலப்புரம் நகராட்சி கவுன்சிலர் பதவியை கே.வி.சசிக்குமார் ராஜினாமா செய்தார். மேலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் தங்களுக்கு கெட்ட பெயர் வந்துவிடக் கூடாது என்பதற்காக, சசிக்குமாரை கட்சியில் இருந்தும் சஸ்பெண்ட் செய்திருக்கிறது.


Share it if you like it