கேரள மாடலின் அவலம்: வாய் திறப்பாரா தோழர்?

கேரள மாடலின் அவலம்: வாய் திறப்பாரா தோழர்?

Share it if you like it

திராவிட மாடல் போன்று கேரள மாடலின் உண்மையான சுயரூபம் தற்பொழுது வெளிச்சத்திற்கு வந்து இருக்கிறது.

கேரளாவில் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இம்மாநிலத்தின், முதல்வராக பினராயி விஜயன், இருந்து வருகிறார். திராவிட மாடல் ஆட்சியில் தமிழக மக்கள் பல இன்னல்களை அனுபவித்து வருகின்றனர். அதைவிட, பல மடங்கு கேரள மாடல் ஆட்சியில், அம்மாநில மக்கள் அனுபவிக்கும் கொடுமைகள் ஏராளம். இதுதவிர, மக்களின் அடிப்படை வசதிகள் கூட பெரும் கேள்விக் குறியாக மாறி உள்ளது. மேலும், கேரள மாநிலத்தில் முறையான குடிநீர், போக்குவரத்து மற்றும் சாலை வசதிகள் இல்லை என்ற குற்றச்சாட்டு இன்று வரை இருந்து வருகிறது.

இந்த நிலையில், இறந்த தனது குழந்தையை 4 கி.மீட்டர் தூரம் நடந்தே தூக்கிக் கொண்டே சென்ற துயர சம்பவம் அரங்கேறி இருக்கிறது. கேரள மாநிலம் அட்டப்பாடியை சேர்ந்தவர் அய்யப்பன். இவரது, நான்கு மாத பெண் குழந்தை உடல் நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது. அங்கு, சிகிச்சை பலனின்றி அக்குழந்தை நேற்று இறந்து விட்டது. ஆனால், இவரது ஊர் வனப்பகுதியில் அமைந்து இருப்பதால் அங்கு செல்வதற்கு சரியான சாலை வசதிகள் இல்லை.

இதனால், சிறிது தூரம் ஆம்புலன்ஸ் மூலம் குழந்தையின் உடலை கொண்டு வந்தார். அதன்பிறகு, ஆம்புலன்ஸ் செல்வதற்கு சாலை வசதி இல்லாததால் டிரைவர்கள் வர மறுத்து விட்டனர். எனவே, தனது கை குழந்தையை தூக்கிக் கொண்டு 4 கி.மீட்டர் தூரம் நடந்தே வீட்டுக்கு வந்து தனது குழந்தையை அடக்கம் செய்ய வேண்டிய அவல நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார். இச்சம்பவம், பெரும் சோகத்தையும், பரபரப்பையும் கேரள மக்களிடையே ஏற்படுத்தி இருக்கிறது.

கேரள முதல்வர் பினராயி விஜயன் அரசை பார்த்து பா.ஜ.க.வினர் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும் என கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த அருணன், சுந்தரவள்ளி போன்றவர்கள் மேடை தோறும் கூறி வரும் இந்த நிலையில் தான் இச்சம்பவம் அரங்கேறி இருக்கிறது.


Share it if you like it