திராவிட மாடலை வெளுத்து வாங்கும் ‘கிடுகு’ திரைப்படத்தின் ட்ரைலர் வெளியாகி இருக்கும் நிலையில், இத்திரைப்படம் விரைவில் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சமீபகாலமாகவே திரைத்துறையில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டு வருகிறது. நிஜத்தை தில்லாக தோலுரித்துக் காட்டும் தைரியம் இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் மத்தியில் நிலவுகிறது. அந்த வகையில், ஜம்மு காஷ்மீரில் ஹிந்து பண்டிட்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதை தோலுரித்துக் காட்டியது ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படம். அதேபோல, கிறிஸ்தவ மிஷனரிகள் எப்படியெல்லாம் மத மாற்றம் செய்கிறார்கள் என்பது வெளிச்சம்போட்டுக் காட்டியது ‘ட்ரான்ஸ்’ என்கிற மலையாள திரைப்படம். தமிழில் இப்படம் ‘நிலைமறந்தவன்’ என்கிற பெயரில் வெளியானது. அந்த வகையில், திராவிட மாடலின் பித்தலாட்டத்தை தோலுரித்துக் காட்டி இருக்கிறது ‘கிடுகு’ திரைப்படம்.
இப்படத்தை வீரமுருகன் இயக்கி இருக்கிறார். ராமலட்சுமி புரொடக்ஷன் மற்றும் கணேஷ் நாகா தயாரிப்பில், ராஜேஸ்வரி சந்திரசேகர் இணைந்து தயாரித்திருக்கிறார். இப்படத்தில் பெரிய நடிகர்கள் யாருமின்றி சிறிய நடிகர்களை வைத்து உருவாக்கி இருக்கிறார்கள். அந்த வகையில், கல்லூரி வினோத் முக்கிய கதாபாத்திரத்தை ஏற்றிருக்கிறார். தவிர, பிர்லா போஸ், கொம்பன் இன்பா, மணிமாறன் போன்றவர்களும் நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் பிரஸ்ட் லுக் போஸ்டர் கடந்த ஜூன் மாதம் வெளியான நிலையில், ஜூலை மாதம் படம் திரைக்கு வரும் என்று கூறப்பட்டது. ஆனால், சில பல காரணங்களால் படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது.
இந்த நிலையில், படத்தின் ட்ரைலர் இன்று வெளியாகி இருக்கிறது. ஆகவே, ‘கிடுகு‘ திரைப்படம் விரைவில் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தில் திராவிட மாடலை வெளுத்து வாங்கி இருக்கிறார்கள் என்பதுதான் ஹைலைட். படத்தில் இடம்பெற்றிருக்கும் ஒவ்வொரு வசனங்களும் நச் ரகம் என்பது கூடுதல் தகவல். உதாரணமாக, ‘அந்தப் பய ஜாதிய ஒழிக்கிறேன்னு சொல்லி என் பொண்ணு கழுத்துல தாலி கட்டுவான் சார். அப்புறம் மூட நம்பிக்கையை ஒழிக்கிறேன்னு சொல்லி நடுரோட்டுல வச்சு தாலிய அறுப்பான்’ என்று ஒரு பெண்ணின் தாய் பேசும் வசனம் வேற லெவல்.
இது மட்டுமா, ‘அவ்வளவு பெரிய ராமாயணம், மகாபாரதத்தையே ஒத்த பொய்யச் சொல்லி ஊரையே நம்ப வச்சு, ஊருக்கு முன்னாடி ராமனையே செருப்பால அடிச்சவனுங்கடா நாங்க’ என்று அவர்கள் வாயாலேயே ஒப்புக்கொள்வது, ‘அவனை மொதல்ல மூலப்பத்திரத்தை காட்டச் சொல்லுங்க’ என்கிற டயலாக் எல்லாம் நச் ரகம். அதேபோல, ‘எல்லா மதத்துக்கும் சுதந்திரம் கிடைச்சுடுச்சு, ஆனா எங்க ஹிந்து மதத்துக்கு மட்டும் சுதந்திரம் இன்னும் கிடைக்கல சார்’ என்ற வசனம், தமிழகத்தில் ஹிந்துக்களுக்கும் ஹிந்து மதமும் எந்தளவுக்கு நிந்திக்கப்படுகிறது என்பதை அப்பட்டமாக வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
எல்லாவற்றும் மேலாக, ‘இந்திய சுதந்திரத்துக்காக போராடுன, சிவகங்கையை ஆண்ட மருது சகோதரர்களுக்கு சிவகங்கையில் சிலை தேவையில்லைன்னு சட்டசபையில சொல்லுதே உங்க திராவிட அரசியல். ஆனா, இந்தியாவுக்கு சுதந்திரம் வேணவே வேணாம்னு சொன்ன ராமசாமிக்கு மட்டும் எதுக்கு சிலை’ என்று கேட்கும் வசனம், உண்மையிலேயே திராவிட மாடலுக்கு சவுக்கடிதான். இவை எல்லாவற்றையும் தூக்கிச் சாப்பிடும் வகையில், ‘காவி வேட்டி கடைசி பக்தன் இருக்குற வரைக்கும் தமிழ்நாட்ட ஆன்மிக பூமியாக மாத்தாம விடமாட்டோம்டா’ என்கிற பஞ்ச் டயலாக், வேற லெவல்.
ஆக மொத்தத்தில், திராவிட மாடலுக்கு ஆப்படிக்க விரைவில் திரைக்கு வரவிருக்கிறது ‘கிடுகு‘.
Eagerly awaiting this film!
Super