வடகொரிய அதிபர் விவரம் தேடிய உளவுத்துறை அதிகாரிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு இருக்கும் சம்பவம் உலக நாடுகள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.
வடகொரிய அதிபராக இருப்பவர் கிம் ஜாங் உன். இவர், ஒட்டு மொத்த நாட்டையும் தனது கட்டுப்பாட்டில் வைத்து கொண்டு பல்வேறு அட்டூழியங்களை செய்து வருகிறார். ஒரு குடும்பத்தின் கீழ் அந்நாடு அடிமைப்பட்டு பல்வேறு கொடுமைகளை அனுபவித்து வருகிறது. அந்நாட்டு மக்கள் எப்படி முடி வெட்டி கொள்வது, என்ன உடை உடுத்த வேண்டும், என்ன சாப்பிட வேண்டும் என அனைத்து முடிவுகளையும் அதிபர் மட்டுமே முடிவு செய்வார். இந்த சட்டத்தை யாரேனும் மீறினால் அவர்களுக்கு கடும் தண்டனை வழங்கப்படும். எதிர்ப்பு கேள்வி எழுப்பினால் மரண தண்டனை நிச்சயம் உண்டு.
இப்படிப்பட்ட சூழலில், அந்நாட்டு உளவுத்துறை அதிகாரி ஒருவர் அதிபர் குறித்த விவரங்களை இணையத்தில் தேடியுள்ளார். இதனை அறிந்த கிம் ஜாங் உன். அந்த அதிகாரியை சுட்டுக்கொள்ள உத்தரவிட்டுள்ளார். இச்சம்பவம், உலக நாடுகள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.