இந்தியாவிலேயே மிகவும் மோசமான ஆறு இதுதான்… ஆய்வறிக்கை பகீர் தகவல்!

இந்தியாவிலேயே மிகவும் மோசமான ஆறு இதுதான்… ஆய்வறிக்கை பகீர் தகவல்!

Share it if you like it

இந்தியாவிலேயே கூவம் ஆறுதான் மிகவும் மாசடைந்த ஆறு என மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

கூவம் சென்னை நகரில் பாயும் மூன்று ஆறுகளில் ஒன்று. அடையாறு, கொற்றலை ஆறு ஆகியவை மற்ற இரு ஆறுகள் ஆகும். ஒரு காலத்தில், தூய நீர் ஓடிய இந்த ஆற்றில் மீன் பிடி தொழிலும் படகுப் போட்டிகளும் நடைபெற்று வந்தன. இன்று சென்னை நகரின் மக்கள் தொகைப் பெருக்கத்தின் காரணமாக கூவம் தனது பெருமையை இழந்து மாசு நிறைந்த ஆறாக ஓடுகிறது. இந்த ஆறு மொத்தம் 72 கி.மீ ஓடுகிறது. புறநகரில் 40 கிலோமீட்டரும், நகருக்குள் 18 கிலோமீட்டரும் ஓடுகிறது. சென்னையிலிருந்து 75 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கேசாவரம் எனும் சிற்றூரில் கல்லாறின் கிளையாறாக இது உருவாகிறது. கூவம் ஆறு உருவாகும் இடத்தில் பாடல் பெற்ற சைவத் தலமான தக்கோலம் அமைந்துள்ளது. இங்கு உருவாகும் கூவம் ஆறுதான் சென்னை நேப்பியர் பாலம் அருகே கடலில் கலக்கிறது.

இந்த நிலையில், பயாலஜிக்கல் ஆக்சிஜன் டிமாண்ட் நடத்திய ஆய்வில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது ; இந்தியாவில் 311 ஆறுகளில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களில் மேற்கொள்ளப்பட்ட ( BIOCHEMICAL  OXYGEN DEMAND ) ஆய்வில் கூவம் ஆறுதான் மிகவும் மாசடைந்த ஆறு என்று கடந்த 2022- ஆம் ஆண்டுக்கான மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு ஆற்றில் எடுக்கப்படும் தண்ணீரில் தூய்மையான தண்ணீராக மாற குறைந்த அளவு ஆக்சிஜன் தேவைப்பட்டால் அந்த ஆறு குறைவாக மாசடைந்து உள்ளதாகவும், மிக அதிக அளவு ஆக்சிஜன் தேவைப்பட்டால் ஆதிகமாக மாசு அடைந்து உள்ளதாகவும் எடுத்துக் கொள்ளப்படும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Share it if you like it