கோவையில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் பொதுக்கூட்டம் நடைப்பெற்றது. கொரோனா வைரஸ் அதிமாக பரவி வரும் நிலையில் இது போன்ற பொதுக்கூட்டம் நடைப்பெற்றால் பேர் அபாயம் ஏற்படும் என்று பலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதற்கு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ”கோவையில் நடைப்பெற்ற கூட்டம் கொடிசியா மைதானம் பொதுவெளியில் தான் நடந்தது. அதனால் தான் அனுமதி அளித்தோம்” என கூறியுள்ளார்.
கோவை திமுக நிகழ்ச்சியின் புகைப்படங்கள் பார்த்தால் கூட்டம் எப்படி நடைபெற்றது என்பதைக் காட்டுகிறது. இதில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ”ஒருங்கிணைந்த 25 ஆயிரம் பேர் கலந்துகொண்ட ஆலோசனை கூட்டத்தில் கோவை மக்களிடம் உரையாற்றினேன்” என்று பெருமையாக குறிப்பிட்டுள்ளார். ஓமிக்ரான் வேகமாகப் பரவி வரும் வேளையில் திமுக இப்படி ஒரு கூட்டத்தை நடத்த வேண்டிய அவசியம் என்ன? மேலும் அந்த கூட்டத்தில் எத்தனை பேர் முகமூடி அணிந்திருந்தார்கள்? இதற்கு காவல் துறை அனுமதி அளித்தது எப்படி என்று பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
ஓமிக்ரான் வேகமாகப் பரவி வரும் நிலையில் அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு அமல்படுத்துமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. உத்தரப் பிரதேசம் போன்ற பல மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தி வரும் நிலையில், தமிழகத்தில் மட்டும் ஆளும் கட்சியினர் இதுபோன்ற கூட்டம் போட்டால் நோய் தொற்று ஏற்படும் என்று பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.