உதயநிதியை உள்குத்தாக குத்திய ஜெ.பி.நட்டா!

உதயநிதியை உள்குத்தாக குத்திய ஜெ.பி.நட்டா!

Share it if you like it

கிருஷ்ணகிரி மாவட்டம் குத்தாரப்பள்ளியில், புதிதாகக் கட்டுப்பட்ட பா.ஜ.க. மாவட்ட அலுவலகத்தை திறந்து வைத்தார் அக்கட்சியின் தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா. தொடர்ந்து, 75 அடி உயர கம்பத்தில் கட்சிக் கொடியை ஏற்றி வைத்தவர், பின்னர் புதுக்கோட்டை, திருச்சி, தேனி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கட்டப்பட்ட பா.ஜ.க. மாவட்ட அலுவலகங்களை காணொலி காட்சி வாயிலாகத் திறந்து வைத்தார்.

இதன் பிறகு நிகழ்ச்சியில் பேசிய ஜெ.பி.நட்டா, “பிரதமர் மோடி அறிவித்த சிறப்பான திட்டங்களின் எதிரொலியாகதான் திரிபுராவில் பா.ஜ.க. மீண்டும் வெற்றி பெற்றது. மாநிலக் கட்சிகள் எல்லாம் தற்போது குடும்பக் கட்சிகளாக மாறிவிட்டன. காஷ்மீர், ஹரியானா, உத்தரப் பிரதேசம், பீகார், ஒடிஸா, தெலங்கானா, மகாராஷ்டிரா, தமிழ்நாடு உட்பட பல்வேறு மாநிலங்களில் வாரிசு அரசியல் நடைபெற்று வருகிறது. தமிழக முதல்வர் ஸ்டாலின், தனது மகன் உதயநிதிக்கு அமைச்சர் பதவி கொடுத்திருக்கிறார். இன்னும் என்னவெல்லாம் நடக்கும் என்பது தெரியவில்லை. திமுகவிற்கு தமிழக மக்கள் மீது அக்கறை இல்லை. காங்கிரஸ் கட்சியின் மோசமான ஆட்சி காரணமாகவே, மாநில கட்சிகள் தோன்றின.

ஒவ்வொரு மாநிலத்திலும் குடும்பக் கட்சிகளுக்கு எதிராக பா.ஜ.க. போராடி வருகிறது. தமிழகத்தில் உள்ள பா.ஜ.க. தொண்டர்கள் அனைவரும் திறமையாகச் செயல்பட்டு வருகின்றனர், ஆகவே, தமிழகத்தில் விரைவில் தாமரை மலரும். மோடி அரசியலில் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வந்திருக்கிறார். வாரிசு அரசியல் கட்சியாக இல்லாமல், மக்களுக்கான நேரடி ஆட்சி செய்யும் கட்சியாக பா.ஜ.க.வை வளர்த்து வருகிறார். உலகம் முழுவதும் தமிழ் மக்களின் பெருமையை கொண்டு சேர்ப்பதற்காக பிரதமர் மோடி செயல்பட்டு வருகிறார். தமிழ்மொழிக்கு மரியாதை கொடுத்திருப்பதால்தான் தமிழ்நாட்டுக்கு பல புதிய திட்டங்களை கொண்டு வந்திருக்கிறார். தமிழகத்தில் தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் செலுத்தும் விதமாக திருவள்ளுவருக்கு மரியாதை கொடுக்கப்பட்டிருக்கிறது” என்றார்.


Share it if you like it