மாட்டு சாணத்தை கிண்டல் செய்பவர்களின் தலையில் குட்டிய குவைத்!

மாட்டு சாணத்தை கிண்டல் செய்பவர்களின் தலையில் குட்டிய குவைத்!

Share it if you like it

மாட்டு சாணத்தை கிண்டல் செய்யும் நபர்களின் தலையில் ஓங்கி குட்டியுள்ளது குவைத் நாடு. 192 மெட்ரிக் டன் மாட்டு சாணத்தை வெகுவிரைவில் அந்நாட்டிற்கு இந்தியா ஏற்றுமதி செய்ய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மாட்டு சாணம், கோமியம், என்றால் தமிழகத்தில் உள்ள அறிவாலய ஊடகங்கள் முதல் சில்லறை வாங்கும் போராளிகள் வரை மிக கடுமையாக கிண்டல் செய்வதையே வாடிக்கையாக கொண்டவர்கள். பசுவின் மூலம் கிடைக்கும் கழிவு பொருட்கள் மற்றும் இன்னும் பிற பொருட்களுக்கு உள்நாடுகளிலும், அயல்நாடுகளிலும் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. அந்தவகையில், கேரள அரசுக்குச் சொந்தமான ஆயுர்வேத மருந்து தயாரிப்பு நிறுவனமான உஷாதி, மாட்டு சாணம், சிறுநீர், பால், நெய் மற்றும் தயிர் ஆகியவற்றால் ஆன‘ பஞ்சகவ்யா க்ருதம் ’விற்பனை செய்து அதிக லாபத்தை கேரள மாநில அரசு பார்த்து வருகிறது. ஆனால், பசுவின் மூலம் கிடைக்கும் மாட்டு சாணத்தையும், கோமியத்தையும் இங்குள்ள தி.மு.க.வினரும் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவர்களும் கிண்டல் செய்து வருகின்றனர்.

இப்படிப்பட்ட சூழலில் தான், முதன் முறையாக குவைத் நாட்டிற்கு 192 மெட்ரிக் டன் மாட்டுச் சாணத்தை இந்தியா குவைத் நாட்டிற்கு ஏற்றுமதி செய்ய இருக்கிறது. இதுகுறித்து, இந்திய இயற்கை உழவர் உற்பத்தியாளர் சங்கத்தின் தேசிய தலைவர் டாக்டர் அதுல் குப்தா ஈடிவி பாரதி ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் கூறியதாவது

இந்தியாவில் கால்நடைகளின் எண்ணிக்கை சுமார் 300 மில்லியன் உள்ளது. “ஒவ்வொரு நாளும் சுமார் 30 லட்சம் டன் மாட்டுச் சாணம் உற்பத்தி செய்யப்படுகிறது. பிரிட்டனில், மாட்டுச் சாணத்திலிருந்து ஆண்டுக்கு ஆறு மில்லியன் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இதுதவிர, ​​சீனாவில், 15 கோடி வீடுகளுக்கு மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. வெளிநாட்டினர் மாட்டுச் சாணத்தின் முக்கியத்துவத்தை நன்கு புரிந்து வைத்துள்ளனர். இதன்காரணமாக, பல நாடுகள் அதனை பயன்படுத்த துவங்கியுள்ளன. மாட்டுச் சாணத்தில் கரிம உரம் ஏராளமாக இருந்து வருகிறது. அந்தவகையில், மாட்டுச் சாணம் போதிய அளவில் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் இருந்து மாட்டுச் சாணத்தில் இருந்து தயாரிக்கப்படும் கரிம உரத்திற்கு (வெர்மி கம்போஸ்ட்) பெரும் வரவேற்பு உள்ளது. அந்தவகையில், அமெரிக்கா, நேபாளம், கென்யா, பிலிப்பைன்ஸ், நேபாளம் போன்ற நாடுகள் இந்தியாவில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் மில்லியன் கணக்கான டன் கரிம உரங்களை ஆர்டர் செய்ய துவங்கியுள்ளது. இந்நிலையில், 192 மெட்ரிக் டன் மாட்டு சாணத்தை குவைத் நாட்டிற்கு இந்தியா ஏற்றுமதி செய்ய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

/https://www.etvbharat.com/english/national/bharat/cow-dung-exported-from-india-to-kuwait/na20220611221859268268743


Share it if you like it