லடாக் – கார்கில் ஸோஜிலா டனல் பாரதத்தின் பாதுகாப்பு கேந்திரம் உலகின் அபாயமான பணியிடம்

லடாக் – கார்கில் ஸோஜிலா டனல் பாரதத்தின் பாதுகாப்பு கேந்திரம் உலகின் அபாயமான பணியிடம்

Share it if you like it

சமீபத்தில் இன்ஸைடர் சேனலின் ஆவணப் பட வரிசையில் உலகின் அதி அபாயமான பணியிடம் என்று ஒரு குறும்படம் வெளியானது. அது நமது பாரதத்தின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் லடாக் கார்கில் பகுதியை இணைக்கும் மலைவழி சுரங்க பாதை கட்டுமானம் நடந்து வரும் பகுதிதான்.

ஜம்மு காஷ்மீர் – லடாக் பகுதியில் உள்ள கார்கில் பகுதியை இணைக்க மலைகளை குடைந்து இருவழி பாதையாக கட்டப்பட்டு வரும் ஆசியாவின் மிக பெரிய சுரங்க பாதை … தற்போது லடாக் பகுதியில் இருந்து மலையை சுற்றி பள்ளத்தாக்கு கடந்து தரை வழியாக பயணிக்கும் போது சுமார் 3-4 மணி நேரம் பயணத்தில் கார்கில் எல்லை பகுதியை அடைய முடியும்.

கடினமான மலைப் பாதை தாழ்வான பள்ளத்தாக்கு பகுதி மயிர் கூச்செரியும் குறுகிய வளைவுகள் என்று அபாயமான இந்த வழித்தடத்தில் கூட வருடத்தின் 6 மாதம் தான் இந்த தரைப் பயணம் சாத்தியம். எஞ்சிய 6 மாதங்கள் கடும் பனி பொழிவு காரணமாக சாலை முடங்கும். போக்குவரத்து வாகனங்கள் இயக்கம் கூட ஸ்தம்பிக்கும் அளவிலான கடும் உறைபனி நிலவும். அந்த காலகட்டத்தில் எல்லைப் பகுதியில் இருக்கும் இராணுவ வீரர்களுக்கு தேவையான உணவு அத்யாவசிய பொருட்கள் அனுப்பி வைப்பது முதல் எல்லையில் இருந்து பணி சுழற்சி மற்றும் பணிமாற்றம் காரணமாக இடம் பெயரும் இராணுவ வீரர்கள் பயணம் வரை எல்லாம் சிக்கலாகும்.

இதன் காரணமாக ஏற்படும் தாமதம் விபத்துகள் மருத்துவ உதவி கிடைக்காத மரணம் என்று பெரும் உயிர்ச்சேதம் ஏற்பட்டு வருகிறது. ஏதாவது நெருக்கடி காலத்தில் எல்லையில் இருக்கும் இராணுவ வீரர்களுக்கு தேவையான ஆயுதங்கள் மற்றும் இராணுவ தளவாடங்கள் கொண்டு போய் சேர்ப்பதில் ஏற்படும் சுணக்கம் காரணமாக தேசம் பெரும் அபாயத்தையும் இராணுவ வீரர்களுக்கு உயிரிழப்பு அதிகரிக்கும் அச்சுறுத்தல் இருந்து வந்தது.

1999 ல் கார்கில் யுத்தத்தின் போது இந்த சாலை வழியாக மட்டுமே இராணுவ வீரர்கள் மட்டும் தளவாடங்கள் எல்லைக்கு போனது. இந்த சாலையை பாகிஸ்தான் விமானங்கள் குண்டு வீசி தகர்த்ததில் தான் நம் தரப்பில் பெரும் உயிர்ச்சேதம் பொருள் சேதம் நேரிட்டது. தரைவழி பயணம் அதிலும் எதிரி நாட்டின் கண்காணிப்பு வளையத்தில் இருக்கும் அபாயமான பாதுகாப்பு குறைபாடு உள்ள வழித்தடம் . இதன் காரணமாக தான் கார்கில் யுத்தம் நீண்டு நம் தரப்பில் சேதாரம் அதிகரித்தது.

2014 ல் பதவியேற்ற மோடி அரசு எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தும் வகையில் தேவையான இராணுவ நிலைகள் கட்டமைப்பு மற்றும் சிவில் தரப்பில் இருந்து உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் அதற்கான வரைவு திட்டம் திட்ட மதிப்பீடு பற்றிய ஆய்வுகள் மற்றும் திட்டமிடலுக்கு தனி குழுவை நியமித்தது. கடந்த காலங்களில் இந்திய பாகிஸ்தான் யுத்தங்களின் போது நேரிட்ட இழப்புகள் – இடர்பாடுகள் அதன் காரணங்கள் நம் தரப்பில் இருக்கும் பாதுகாப்பு குறைபாடுகள் ஏற்படுத்தும் பலவீனங்களின் காரணிகள் மற்றும் அதற்கான தீர்வுகள் என்ற வகையில் நிகழ்ந்த ஆய்வுகள் தரவுகள் அடிப்படையில் தான் எல்லைகளை பாதுகாக்க தேவையான போக்குவரத்து மற்றும் பாதுகாப்பான வழித்தடங்கள் தேவையும் அது நம் தரப்பில் பெரும் பலவீனமாக இருந்தது உறுதியானது. லடாக் பகுதியில் இருந்து எல்லைக்கு பயணப்பட. எல்லா இடங்களிலும் ஆண்டு முழுவதும் பயணிக்கும் வகையில் எல்லா சீதோஷ்ண நிலையில் இயங்கும் வகையில் காஷ்மீர் – லடாக் – கார்கில் ஸோஜிலா டனல் சர்வதேச தரத்தில் சுரங்க வழி கட்டுமானம் நிர்மாணம் செய்ய முடிவானது.

கடல் மட்டத்திலிருந்து 12000 அடி உயரத்தில் , இந்திய பண மதிப்பில் பண மதிப்பில் 8000 கோடி பட்ஜெட் ..திட்ட மதிப்பீடு கொண்டது . லடாக் பகுதியில் இருந்து கார்கில் முனையை அடைய தற்போது சாலை மார்க்கமாக மட்டுமே மூன்று மணி நேரம் பயணிக்க வேண்டும். ஆனால் இந்த 14 கிமி மலைக் குகை வழியான சுரங்க பாதை மூலம் 20-30 நிமிடங்களில் லடாக் – கார்கில் பயணம் சாத்தியமாகும். 8000 கோடி பட்ஜெட் ..திட்ட மதிப்பீடு கொண்டது . லடாக் பகுதியில் இருந்து கார்கில் முனையை அடைய தற்போது சாலை மார்க்கமாக மட்டுமே மூன்று மணி நேரம் பயணிக்க வேண்டும். ஆனால் இந்த 14 கிமி மலைக் குகை வழியான சுரங்க பாதை மூலம் 20-30 நிமிடங்களில் லடாக் – கார்கில் பயணம் சாத்தியமாகும்.

பல பில்லியன் ஆண்டுகள் பழமையான பாறைகளை 6 / 7 மாதம் தான் ஒரு வருடத்தில் வேலை செய்ய முடியும் ..பனிப்பொழிவு ஏற்பட்டால்

பணியாளர்களுக்கு பிராண வாயு பற்றாக்குறை கூட ஏற்படும் .சாதாரணமாகவே 12000 அடி உயரத்தில் சுவாச பிரச்சனை வரலாம் . ,இதில் சுரங்க பாதையில் பணி செய்யும் போது எவ்வளவு இடர்பாடுகள் இருக்கும் என்று யோசியுங்கள். ?கடவுள் மேல் பாரத்தை போட்டுவிட்டு தினமும் பணிக்கு கிளம்புகிறார்கள் .. கட்டுமான தொழிலாளர்கள் என்றாலும் தங்களின் பணியில் இருந்து பின் வாங்க தயாரில்லாத அந்த தேசிய வாதிகள்.

சரி. மோடி அரசு ஏன் இதையெல்லாம் செய்கிறது.? தேசம் பாதுகாப்பு உறுதி செய்ய வேண்டும் எனில் உள்ளும் புறமும் பாதுகாப்பை உறுதி செய்ய தேவையான அனைத்து கட்டுமானம் தளவாடங்கள் படைகள் என்று அனைத்தையும் நவீன படுத்த வேண்டும். முக்கியமாக பனி காலங்களில் மூடப்படும் சாலைக்கு மாற்றாக ..பாதுகாப்பான வழித்தடங்கள் தேவை. வருடம் முழுவதும் போக்குவரத்துக்கு தடை இல்லாமல் பாதுகாப்பு அச்சுறுத்தல் தடையில்லா பயண வழி தேவை.

மிக முக்கியமாக அங்கே எல்லையில் நம்முடன் வம்பு இழுக்கும் சீன இராணுவத்திற்கு உடனடியாக பதலிடி கொடுக்க இராணுவ நகர்வு சுலபமாக இலகுவான போக்குவரத்து கட்டுமானம் தேவை. இந்த கட்டுமானம் பணி முடிந்ததும் 2026 ல் பயன்பாட்டிற்கு வரும் என்று தகவல் வெளியாகிறது.

இப்படி நாட்டின் பாதுகாப்பின் ஒவ்வொரு தேவையையும் பார்த்து பார்த்து செய்யும் இந்த அரசின் திட்டங்கள் நிர்வாக நடைமுறைகளில் குற்றம் காண்பதும் ஊழல் என்ற குற்றச்சாட்டு வைப்பது மிக எளிது.

ஆனால் விரைவான போக்குவரத்து என்று வாஜ்பாய் அரசு கட்டமைத்த தங்க நாற்கர சாலைகளை விரிவாக்கம் செய்து அவற்றை தேவையான இடங்களில் எல்லாம் அதிவிரைவு சாலைகளாக மாற்றியது. கூடுதலாக உருவாக்கும் தரை வழி போக்குவரத்து கட்டுமானத்தில் சர்வதேச தரத்தை புகுத்தியது என்று தொலை நோக்கு திட்டம் ஏராளம். அதன் விளைவு தான் நாடு முழுவதும் இன்று பயன் பாட்டிற்கு வரும் பதிய சாலை போக்குவரத்து கட்டுமானங்கள் எல்லாம் தேவைப்படும் பட்சத்தில் விமானங்கள் தரையிறங்கும் மற்றும் பிரயாணம் செய்யும் அளவில் கட்டமைக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் நெருக்கடி காலத்தில் பயணிகள் விமானம் சரக்கு போக்குவரத்து விமானம் முதல் விமானப் படை போர் விமானங்கள் வரை நாட்டின் எந்த மூலையிலும் தரையிறங்கும் எங்கிருந்து வேண்டுமானாலும் புறப்பட்டு போக முடியும் என்ற பாதுகாப்பு முக்கியத்துவத்தை வாய்ந்த அதிநவீன போக்குவரத்து கட்டுமானங்களின் அறிமுகம்.

ஒரு நாட்டின் முன்னேற்றம் மற்றும் பாதுகாப்புக்கு எவ்வளவு அவசியம்? என்பதை சொல்லும் இது போன்ற கட்டுமானங்கள் எதிர் காலத்தில் தேசம் இயற்கை பேரிடர் – யுத்தம் என்று எதையும் எதிர் கொள்ளவும் அத்தனையும் கடந்து தேசத்தின் பாதுகாப்பு உறுதி செய்யும் வகையில் இருக்கும்.

சமவெளியில் பாதுகாப்பான இடத்தில் இருந்து கொண்டு இந்திய இராணுவத்தை விமர்சிப்பவர்கள் யாரும் இந்த எல்லையில் சுற்றுலா போக கூட தயாரில்லை. இந்த திட்டத்தை தேவையற்றது என்று விமர்சனம் செய்யும் யாரும் இராணுவ பங்களிப்பு வழங்கியவர்கள் இல்லை.

இந்த திட்டம் மதிப்பீடு மற்றும் திட்டவரைவு பற்றி எந்த புரிதலும் இல்லாமல் இதை குறை சொல்பவர்கள் யாரும் இந்த கட்டுமான பணி இடத்தை பார்வையிட கூட துணிச்சல் இல்லாதவர்கள் தான். பாதுகாப்பு விதிமுறைகள் மீறி தனது அந்நிய சகாக்களோடு இராணுவ இடத்தில் இரண்டு சக்கர சவாரி செய்யும் அரசியல் வாதிகள். அரசியல் போர்வையில் அந்நியரிடம் தேசத்தை காட்டி கொடுக்கும் பாவிகளுக்கு இவர்கள் அடிவருடும் உள் நாட்டு துரோகிகளுக்கு தேசிய உணர்வும் வராது. அந்த உணர்வோடு செயல் படும் மனிதர்கள் அருமையும் தெரியாது.


Share it if you like it