தேசவிரோத பிடியில் இந்திய திரை உலகம் – என்ஐஏ விசாரணை வளையத்தில் தமிழ் திரை பிரபலங்கள்

தேசவிரோத பிடியில் இந்திய திரை உலகம் – என்ஐஏ விசாரணை வளையத்தில் தமிழ் திரை பிரபலங்கள்

Share it if you like it

கடந்த சில ஆண்டுகளாக இந்திய திரையுலகில் இருந்து தொடர்ச்சியான இந்து – இந்திய விரோத கருத்துக்களும் மோடி எதிர்ப்பு கோஷமும் வெளிவந்த வண்ணம் இருந்தது. அதன் பின்னணியில் பண மதிப்பிழப்பு மற்றும் வெளிநாடுகளில் இருந்து பணம் பெரும் முறையில் கொண்டு வந்த கட்டுப்பாடுகள் என்று பல்வேறு விஷயங்கள் இருந்தாலும் அதையும் கடந்து கண்ணுக்குத் தெரியாத ஏதோ ஒரு மர்மம் இருப்பதை கண்கூடாக உணர முடிந்தது. பாகிஸ்தான் நாட்டில் இருக்கும் போதை – கடத்தல் கும்பலோடு நெருங்கிய தொடர்பில் இருந்த பாலிவுட் பிரபலங்களின் தொடர்புகள் ஆதாரப்பூர்வமாக வெளிவந்து பெரும் பிரபலங்களின் குடும்பத்தார் கையும் களவுமாக கைது செய்யப்பட்ட போது இந்த ஊர்ஜிதம் உண்மையானது.

ஆபாசம் – வன்முறை – விஷம கருத்தியல் என்று பெரும் சீரழிவுகளின் பிறப்பிடமாக இருந்த இந்திய திரை உலகை கண்காணிக்கவும் கட்டுப்படுத்தவும் ஒளி ஊடகவியல் கண்காணிப்பு கட்டுப்பாட்டு சட்டத்தை கடுமையாக்கும் வகையிலான சட்ட திருத்தத்தை மத்திய அரசு கொண்டு வரும் முயற்சியில் இருப்பதும் இந்த மோடி எதிர்ப்பு கோஷத்திற்கும் ஒரு காரணம் என்று சொல்லப்பட்டது. அதே நேரத்தில் இதே திரை உலகில் இருந்து தேசியவாதிகள் – நடுநிலையாளர்கள் ஆதரவும் மத்திய அரசுக்கு ஆதரவாகவும் திரையுலகை பீடித்து இருக்கும் பிரிவினைவாதிகளுக்கு எதிராகவும் கணிசமாக வெளிப்பட தொடங்கியது.

இந்திய அளவில் தமிழ் திரையுலகில் இருந்து தான் பெரும் இந்து இந்திய விரோத கோஷமும் மோடி எதிர்ப்பு அரசியலும் முன்னணியில் இருந்தது . அதிலும் குறிப்பிட்ட சில கலைத்துறை நடிகர்களும் அவர்களின் குடும்பமும் திரைப்படம் சார்ந்த தொழில் பங்களிப்பை விட மோடி எதிர்ப்பு அரசியலையே முழு நேர தொழிலாக செய்து வந்தது. அதன் பின்னணியில் வெளிநாடுகளில் இருந்து நன்கொடை என்ற பெயரில் பணம் பெறுவதை ஒரு அறக்கட்டளை மூலம் செய்து வந்த ஒரு நடிகரும் அவரது குடும்பமும் அறக்கட்டளை என்ற போர்வையில் தடை செய்யப்பட்ட அமைப்புகளுக்கும் சட்டவிரோத பணி பரிமாற்ற நடவடிக்கைகளுக்கும் துணை போனதாக ஆதாரங்கள் மத்திய அரசிடம் பிடிபட்டு இருப்பதால் இந்த மோடி எதிர்ப்பு அரசியல் செய்யப்படுவதாகவும் தகவல்கள் வெளியானது.

சொல்லி வைத்தார் போல அந்த நடிகர் தனது அறக்கட்டளை நடவடிக்கைகளை பெருமளவில் குறைத்ததும் தமிழகத்தை விட்டு வெளியேறி வேறு ஒரு வட இந்திய மாநிலத்தில் குடும்பத்துடன் குடியேறியதும் கூட நடந்தேறியது. ஆனாலும் மத்திய அரசின் பாதுகாப்பு முகமைகள் கண்காணிப்பு கட்டுப்பாடுகளும் இன்றளவும் தொடர்ந்த வண்ணம் தான் இருக்கிறது. அதன் அச்சம் காரணமாக அவர்களின் மோடி எதிர்ப்பு இந்திய எதிர்ப்பு கோஷமும் தீவிரமாக வெளிப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது.

இந்நிலையில் வெளிநாடுகளில் இருந்து தங்கம் இந்திய கரன்சி மற்றும் அந்நிய கரன்சிகள் உள்ளிட்டவை கடத்தப்பட்ட விவகாரத்தில் கேரள மாநில அரசின் மேல்மட்ட தலைகள் சிக்கியது. அந்த விஷயத்திலும் பெரும் திரைப்பட பிரமுகர்கள் சிக்குகிறார்கள் என்ற தகவல் வெளியாகி தென்னிந்திய திரை உலகை அதிர வைத்தது. அதில் குறிப்பாக அரபு நாடுகளில் கோல்டன் விசா என்னும் சிறப்பு அந்தஸ்து பெற்ற நடிகர்கள் பெருமளவில் சிக்கக் கூடும் என்ற தகவலும் வெளியானது .

இந்த புகைச்சல்கள் அடங்கும் முன்னே தமிழ் திரையுலகில் பிரபல நடிகரும் அரசியல்வாதியுமான சரத்குமார் என்பவரின் மகளும் நடிகையுமான வரலட்சுமி சரத்குமார் அவர்களின் உதவியாளராக இருந்த ஆதி லிங்கம் என்பவர் பாகிஸ்தான் தொடர்பிலான போதை ஆயுதம் கடத்தல் கும்பலோடு நேரடி தொடர்பில் இருந்ததாக தேசிய பாதுகாப்பு முகமையால் கைது செய்யப்பட்டு விசாரணை விடயத்தில் இருந்தார். இந்நிலையில் இந்த விவகாரம் சம்பந்தமாக வரலட்சுமி சரத்குமாரை விசாரிக்க விரும்புவதாக நேரில் ஆஜராகும் படி தேசிய பாதுகாப்பு முகமையிலிருந்து வரலட்சுமி சரத்குமார் அவருக்கு என்ஐஏ விடமிருந்து சமன் வந்திருப்பதாக தகவல் வெளியாகிறது.

தென் மாவட்ட கடலோரப் பகுதிகளில் தொடர்ந்து நடைபெறும் கடத்தல் மற்றும் அதன் தொடர்பிலான இலங்கை தொடர்புகள்சர்வதேச அளவிலான போதை பொருள் தொடர்புகளும் பாகிஸ்தான் உடனான போதை பொருள் கடத்தல் தொடர்புகளும் ஒரே நூலிழையில் இணைந்து செயல்படுவதும் அதன் தொடர்புகள் யாவும் இந்திய திரையுலகில் பல்வேறு முனைமங்களாக செயல்படுவதும் ஆதாரபூர்வமாக வெளிவருகிறது. இந் நிலையில் கைது விசாரணையை தொடர்ந்து இன்று நேரில் ஆஜராக சம்மன் வரும் அளவில் இதன் தாக்கம் ஆழ்ந்து ஊடுருவி இருப்பது திரையுலகின் தேச விரோத பிண்ணனியை வெளிச்சம் போட்டு காட்டுகிறது.

அந்நிய சித்தாந்தங்கள் மத மாற்றம் மத பயங்கரவாதம் என்று வெளிப்படையாக தேசவிரோதம் தலைவிரித்து ஆடுவதும் அந்த ஆதரவு சிந்தனையாளர்கள் பெரும் ஆதரவோடு திரையுலகில் வளர்ந்து கோலோச்சுவதும் தேசிய சிந்தனை உடையவர்களும் நடுநிலையான கலைஞர்களும் திட்டமிட்டு ஓரங்கட்டப்படுவதும் அவர்களுக்கு பல்வேறு ரீதியான தொழில் ரீதியான நெருக்கடிகளும் மன உளைச்சல்களும் கொடுக்கப்பட்டு பலரும் தொடர்ந்து தற்கொலை மரணம் அடைந்ததையும் சமீபத்தில் பார்த்து வந்தோம் .அந்த வகையில் இந்து இந்திய எதிர்ப்பு சிந்தனை இருந்தால் மட்டுமே இந்திய திரையுலகில் கோலோச்ச முடியும். இல்லையென்றால் அன்றாட பிழைப்பிற்கு திண்டாடும் நிலை தான் என்ற எழுதாத சட்டத்தை சமீபமாக முறியடித்து சில தேசியவாதிகள் இந்திய திரை உலகை தேசவிரோத சக்திகளிடம் இருந்து மீட்டெடுக்க பெரும் பிரயத்தனம் செய்து வருவதையும் பார்க்கிறோம்.

இதற்கு எதிர்வினையாக தொடர்ச்சியாக தேசவிரோத கருத்துக்களை வெளியிட்டு வந்த பலரும் உண்மையில் பல்வேறு மர்மமான நடவடிக்கைகள் சட்டவிரோத தொடர்புகள் தேச விரோத அமைப்புகள் தொடர்பில் இருந்ததும் அவர்களின் மர்மமான நடவடிக்கைகள் எல்லாம் தொடர் கண்காணிப்பு ஆவணப்படுத்தகை மூலம் எந்த வகையிலும் தப்பிக்க முடியாத வகையில் தேசிய பாதுகாப்பு முகமைகளின் வசம் உளவுத்துறை கண்காணிப்பு வளையம் என்று வசமாக சிக்கி இருந்ததும் இனி எந்த விலை கொடுத்தும் தாம் மீள முடியாது என்ற நிலையில் தான் அவர்கள் அத்தனை பேரும் சொல்லி வைத்தார் போல இந்திய எதிர்ப்பு மோடி எதிர்ப்பு கோஷத்தை முன்னெடுத்ததும் ஊர்ஜீதமாகிறது. அவர்களின் உண்மை முகம் வெளிவரும் போது அவர்களின் தேச விரோத சதி செயலும் சட்ட விரோதம் நடவடிக்கைகளும் மக்கள் அம்பலமாகும் என்று பல தரப்பினரும் சொல்லி வந்த கருத்துக்கள் தற்போது உண்மையாகி இருக்கிறது.

மும்பை நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் மற்றும் அவனது கூட்டாளிகள் பிடியில் இருந்த இந்திய திரை உலகம் பற்றிய உண்மைகள் 1992 மும்பை தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தில் திரை உலகின் தொடர்புகள் வெளியாகி தேசத்தை அதிர வைத்தது. அதன் தொடர்ச்சியாக பல திரையுலக பிரபலங்கள் தொடர்ச்சியாக மர்ம மரணம் அடைந்தார்கள். அதிலிருந்து பாடம் கற்காத திரை உலகம் இன்று சர்வதேச பயங்கரவாத தொடர்புகள் வரை நீண்டிருப்பது இந்திய திரை உலகின் பணம் – புகழ் – அதிகார – சுயநல வெறியையும் தேசவிரோத முகத்தையும் தோலுரித்து காட்டுகிறது.


Share it if you like it