எனது பெரிய அண்ணனுக்கு நன்றி!

எனது பெரிய அண்ணனுக்கு நன்றி!

Share it if you like it

நமது அண்டை நாடான இலங்கைக்கு பாரதப் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு செய்து வரும் உதவிகளுக்கு ஓய்வு பெற்ற இலங்கை கிரிக்கெட் வீரர் சனத் ஜெயசூர்யா நன்றி தெரிவித்துள்ளார்.

மகுடிக்கு மயங்கிய பாம்பு போல சீனாவின் பேச்சிற்கு ஆடிய இலங்கை இன்று மிக கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது. இதன் காரணமாக, அந்நாடு தற்பொழுது அதளபாதாளத்திற்கு சென்று விட்டது. தி.மு.க தலைவர் ஸ்டாலின் குடும்பம் எப்படி? தமிழகத்தை வழிநடத்தி வருகிறதோ, அதேபோன்று, இலங்கையிலும் குடும்ப ஆட்சி நடைபெற்று வருகிறது. இலங்கை அதிபராக தம்பி கோத்தபய ராஜபக்சே, பிரதமராக அண்ணன் மகிந்த ராஜபக்சே என ஒட்டு மொத்த இலங்கையையும் அந்த குடும்பம் சீரழித்து உள்ளது என்பதே நிதர்சனம்.

பேராசை, ஊழல், குடும்ப ஆதிக்கம் காரணமாக இலங்கை தற்பொழுது பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது. இதனால், அப்பாவி இலங்கை தமிழர்கள் உட்பட பெரும்பான்மையான சிங்கள மக்களும் தற்பொழுது வீதியில் இறங்கி போராடி வரும் நிலை ஏற்பட்டுள்ளது. வறுமை, பசி, பட்டினி, பஞ்சம் என அந்நாடு அழிவு பாதையில் சென்று கொண்டு இருக்கிறது. இலங்கை மக்களின் துயரத்தை போக்கும் விதமாக இந்தியா பல உதவிகளை இன்று வரை செய்து வருகிறது.

அதேபோல, கொரோனா தொற்று இலங்கையை புரட்டி போட்ட சமயத்தில் மருந்துகள், மாத்திரைகள், தடுப்பூசிகள் என பல மருத்துவ உதவிகள் செய்யப்பட்டன. அந்தவகையில், பொருளாதார நெருக்கடியில் உள்ள இலங்கைக்கு கடன் உதவி மற்றும் பொருளுதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர் சனத் ஜெயசூர்யா இவ்வாறு அறிக்கை வெளியிட்டுள்ளார். சுதந்திரத்திற்குப் பிறகு மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள தீவு தேசத்திற்கு இந்திய அரசாங்கம் பல்வேறு உதவிகளை செய்துள்ளது.
“அண்டை நாடாகவும், நமது நாட்டின் பெரிய சகோதரராகவும், இந்தியா எப்போதும் எங்களுக்கு உதவி வருகின்றன. இந்திய அரசு மற்றும் பிரதமர் மோடிக்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். தற்போதைய சூழ்நிலையில் எங்களைப் பொறுத்தவரை, உயிர்வாழ்வது எளிதானது அல்ல. நாங்கள் வெளியே வருவோம் என்று நம்புகிறோம் என்று தெரிவித்துள்ளார். இதே போல, இலங்கை முன்னாள் கேப்டன் ரணதுங்கா மோடி அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it