பிப். 21 முதல் லாவண்யா வழக்கு விசாரணை: சி.பி.ஐ. அதிரடி!

பிப். 21 முதல் லாவண்யா வழக்கு விசாரணை: சி.பி.ஐ. அதிரடி!

Share it if you like it

மாணவி லாவண்யா மரணம் தொடர்பான வழக்கில் சி.பி.ஐ. விசாரணையே தொடரும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தைத் தொடர்ந்து, விசாரணையை பிப்ரவரி 21-ம் தேதி முதல் தொடங்க சி.பி.ஐ. முடிவு செய்திருக்கிறது.

தஞ்சாவூர் மைக்கேல்பட்டியிலுள்ள தூய இருதய மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்த அரியலூர் மாணவி லாவண்யா, திடீரென பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். இவரது மரணத்துக்கு மதமாற்ற விவகாரம்தான் காரணம் என்று சொல்லப்பட்டது. இந்த வழக்கை மாநில போலீஸார் விசாரித்து வந்த நிலையில், சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று லாவண்யாவின் தந்தை முருகானந்தம், மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்தார். இதை விசாரித்த நீதிமன்றம், வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றி உத்தரவிட்டது.

இதையடுத்து, சி.பி.ஐ. விசாரணைக்கு தடை கோரி, தி.மு.க. தலைமையிலான தமிழக அரசு, உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. இந்த வழக்கு நேற்று (பிப்.14-ம் தேதி) விசாரணைக்கு வந்த நிலையில், சி.பி.ஐ. விசாரணையே தொடரும் என்று உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், கட்டாய மதமாற்ற விவகாரம் தொடர்பாகவும் சி.பி.ஐ. விசாரணை தேவை என்று உத்தரவிட்டனர். மேலும், தமிழக அரசு இதை தன்மானப் பிரச்னையாகக் கருதாமல், வழக்கு குறித்த அனைத்து ஆவணங்களையும் சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கூறியிருந்தது.

இதைத் தொடர்ந்து, சி.பி.ஐ. தனது விசாரணையை தொடங்க முடிவு செய்திருக்கிறது. எதிர்வரும் 21-ம் தேதி முதல் விசாரணையை தொடங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருக்கிறது. முதல்கட்டமாக மாணவியின் பெற்றோரிடம் விசாரணை நடத்த முடிவு செய்திருக்கும் சி.பி.ஐ., தொடர்ந்து ஊர் மக்களிடமும், பின்னர் மைக்கேல்பட்டி தூய இருதய மேல்நிலைப்பள்ளி நிர்வாகத்திடமும் விசாரணை நடத்த திட்டமிட்டிருக்கிறது.


Share it if you like it