லாவண்யாவுக்கு நீதிகேட்டு ஸ்டாலின் வீடு முற்றுகை! ஏ.பி.வி.பி. அதிரடி: 40 பேர் கைது!

லாவண்யாவுக்கு நீதிகேட்டு ஸ்டாலின் வீடு முற்றுகை! ஏ.பி.வி.பி. அதிரடி: 40 பேர் கைது!

Share it if you like it

லாவண்யா மரணத்துக்கு நீதிகேட்டு ஸ்டாலின் வீட்டை முற்றுகையிட்ட ஏ.பி.வி.பி. அமைப்பைச் சேர்ந்த சுமார் 40 பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.

தஞ்சாவூர் மாவட்டம் மைக்கேல்பட்டியிலுள்ள தூய இருதய மேல்நிலைப்பள்ளியில் படித்த, அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி லாவண்யா பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். இவரது சாவுக்கு மதமாற்ற டார்ச்சர்தான் காரணம் என்று கூறப்படுகிறது. இதையடுத்து, லாவண்யா மரணத்துக்கு நீதிகேட்டு, தமிழகத்தையும் தாண்டி அகில இந்திய அளவில் வி.ஹெச்.பி., ஹிந்து முன்னணி, பா.ஜ.க. உள்ளிட்ட ஹிந்து அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டன.

இதனிடையே, மாநில போலீஸாரின் விசாரணையில் திருப்தி இல்லாததாகக் கூறி, சி.பி.சி.ஐ.டி. விசாரணை கோரி மாணவியின் பெற்றோர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதி, சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டார். இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது தி.மு.க. அரசு. இதனால், தி.மு.க. மீது ஹிந்து அமைப்புகள் ஆத்திரமடைந்தன. ஆனாலும், சி.பி.ஐ. விசாரணைக்கு தடைவிதிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் கூறிவிட்டது.

இந்த நிலையில்தான், லாவண்யாவின் மரணத்துக்கு நீதி கேட்டு, 50-க்கும் மேற்பட்ட அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் அமைப்பினர், இன்று (பிப்.14-ம் தேதி) காலையில் தி.மு.க. தலைவரும், தமிழக முதல்வருமான ஸ்டாலின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களில், சுமார் 40 பேரை போலீஸார் கைது செய்தனர். மாணவியின் மரணத்துக்கு நீதி கேட்டு போராடிய இளைஞர்களை காவல்துறை கைது செய்திருப்பது தமிழக மக்களிடை கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.


Share it if you like it