பிரபல ஹாலிவுட் ஹீரோ லியோனார்டோ டிகாப்ரியோ பா.ஜ.க. ஆளும் அஸ்ஸாம் மாநில முதல்வரை வெகுவாக பாராட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆஸ்கார் விருது பெற்ற நடிகர் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலருமாக இருப்பவர் லியோனார்டோ டிகாப்ரியோ. இவர், பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் ஒன்றான அஸ்ஸாம் மாநில முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மாவின் அரசை பாராட்டியுள்ளார். அதாவது, அழிவின் விளிம்பில் உள்ள உயிரினம் ஒற்றைக் கொம்பு காண்டாமிருகம். இதன், கொம்பிற்கு ஆசைப்பட்டு சமூக விரோதிகள் தொடர்ந்து அதனை வேட்டையாடி வந்தனர்.
அழிந்து வரும் ஒற்றைக் கொம்பு காண்டாமிருகத்தை பாதுகாக்கும் பொருட்டு அஸ்ஸாம் மாநில பா.ஜ.க. அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு இருந்தன. அதன்பயனாக, கடந்த 1977ஆம் ஆண்டுக்குப் பிறகு முதன்முறையாக 2022ஆம் ஆண்டு அஸ்ஸாம் மாநிலத்தில் இதுவரை காண்டாமிருகம் தொடர்பாக எந்த ஒரு வழக்கும் பதிவு ஆகவில்லை என கடந்த ஜனவரி 1-ஆம் தேதி அம்மாநில அரசு அறிவித்து இருந்தது.
இந்த நிலையில், பிரபல ஹாலிவுட் நடிகரும் சுற்றுச்சூழல் ஆர்வலருமான லியோனார்டோ டிகாப்ரியோ தனது இன்ஸ்டாகிராமில் இவ்வாறு பதிவிட்டுள்ளளார்:
இந்திய மாநிலமான அஸ்ஸாம் காசிரங்கா தேசிய பூங்காவில் 2000 -ஆம் ஆண்டுக்கு இடையில் சுமார் 190 காண்டாமிருகங்கள் அவற்றின் கொம்புகளுக்காக வேட்டையாடப்பட்டு இருந்தன. அழிந்து வரும் பெரிய கொம்பு காண்டாமிருகத்தை வேட்டையாடுவதை தடுத்து நிறுத்தும் பொருட்டு அஸ்ஸாம் அரசு மேற்கொண்ட முயற்சிகள் பாராட்டுக்குறியது என்று தெரிவித்துள்ளார்.