பெண் சக்தி தெய்வங்களை எதிர்க்கும் திமுகவை வீழச்செய்வோம் – வானதி சீனிவாசன் சூளுரை !

பெண் சக்தி தெய்வங்களை எதிர்க்கும் திமுகவை வீழச்செய்வோம் – வானதி சீனிவாசன் சூளுரை !

Share it if you like it

விருதுநகர் பாராளுமன்ற தொகுதி திருமதி.ராதிகா அவர்களை ஆதரித்து திருநகர் பகுதியில் பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். இதுதொடர்பாக வானதி சீனிவாசன் எக்ஸ் பதிவில் குறிப்பிட்டிருப்பதாவது :-

ராகுல் காந்தி அவர்கள் இந்து மதத்தின் பெண் சக்தியை அழிப்பேன் என்கிறார். நம் பிரதமர் மோடியோ ஒவ்வொரு பெண்களை சக்தி வடிவாக எண்ணி அவர்கள் காலை தொட்டு வணங்குகிறார். பெண்களுக்கு எண்ணற்ற நலத்திட்டங்களை அளித்து அவர்கள் வாழ்வை மேம்பட தன்னை அர்ப்பணித்து கொள்கிறார்.

இங்கு நம் மோடி ஜி இந்த மாவட்ட மக்களின் வளர்ச்சிக்காக, மிகத் திறமையான, வலிமையான பெண் “சித்தி” ராதிகா சரத்குமார் அவர்களை பாஜக சார்பில் இத்தொகுதி பாராளுமன்ற வேட்பாளராக களமிறக்கியிருக்கிறார்.

2022ம் ஆண்டு நிதி ஆயோக் கணக்கெடுப்பில் மிகவும் பின்தங்கிய விருதுநகர் மாவட்டம் – பின்னர் நிர்மலா சீதாராமன் அவர்கள் நேரடி கண்காணிப்பில் 2 ஆண்டுகளாக அனைத்து நல திட்டங்களையும் அளித்து அவர்கள் நல் வாழ்வுக்கு வித்திட்டார்.

விருதுநகர் மாவட்டத்திற்கு மருத்துவ கல்லூரி, ஜவுளி தொழில்பூங்கா அளித்து நலிந்து கிடந்த சிவகாசி பட்டாசு தொழிற்சாலைகளை முன்னேற்றியவர் நரேந்திர மோடி ஜி.

விருதுநகர் மாவட்டம் பெண்கள், ஆண்கள் அனைவரும் இணைந்து நம் பெண் சக்தி தெய்வங்களை எதிர்க்கும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் நண்பர் விருதுநகர் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக் தாக்கூரை, பெண் சக்தியாம் பாஜகவின் ராதிகா சரத்குமார் மூலம் தோற்கடிக்க வேண்டும். இதன் மூலம் பெண் சக்திகளை இழிவுபடுத்தும் மூடர்களுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும்.

நாம் வணங்கும் இந்த சக்தி தெய்வங்களை எதிர்க்கும் மற்றும் பெண்களுக்கு அநீதி இழைத்து கொண்டு இருக்கும் இந்த திமுகவை நாம் பலம் கொண்டு எதிர்ப்போம். வீழச்செய்வோம். தாமரை எங்கெங்கும் மலர செய்வோம்.


Share it if you like it