“சுயத்தன்மையுடன் ராஷ்ட்ரம் மறுமலர்ச்சி அடைய உறுதியேற்போம்”: ஆர்.எஸ்.எஸ்

“சுயத்தன்மையுடன் ராஷ்ட்ரம் மறுமலர்ச்சி அடைய உறுதியேற்போம்”: ஆர்.எஸ்.எஸ்

Share it if you like it

“சுயத்தன்மையுடன் ராஷ்ட்ரம் மறுமலர்ச்சி அடைய உறுதியேற்போம்”: ஆர்.எஸ்.எஸ்

மார்ச் 12, 13, 14 ல் ஹரியானாவில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ்ஸின் அகில பாரதிய பொதுக்குழு நிறைவேற்றிய தீர்மானத்தின் தமிழாக்கம் வருமாறு:
உலக நலவாழ்வு என்னும் உன்னத நோக்கத்துடன் பாரதத்தின் ‘சுயத்தன்மை’ மேற்கொண்ட நீண்ட பயணம் நம் அனைவருக்கும் என்றென்றும் உத்வேகத்தின் ஊற்றுக்கண் என்று அகில பாரத பிரதிநிதி சபா கருதுகிறது. அன்னியர் படையெடுப்புகளும் போராட்டங்களும் நடந்த காலத்தில், பாரத சமுதாய வாழ்க்கைக்கு குந்தகம் ஏற்பட்டது. சமூக, பொருளாதார, கலாச்சார, சமய முறைகள் வெகுவாக சிதைந்து போயின. அந்த நேரத்தில், போற்றுதலுக்குரிய துறவிகள், மாபெரும் தலைவர்கள் ஆகியோரின் வழிகாட்டுதலின் படி, ஒட்டுமொத்த சமுதாயமும் தொடர்ந்து போராடியபடியே தனது ஸ்வய தன்மையைப் பாதுகாத்துக் கொண்டது. ஸ்வ தர்மம், ஸ்வ தேசி, ஸ்வ ராஜ்யம் ஆகிய மும்முனை கொண்ட (ஸ்வ-த்ரயீ) இந்தப் போராட்டத்தில் ஒட்டுமொத்த சமுதாயமும் பங்கெடுத்தது. பாரத சுதந்திரத்தின் அமுதப் பெருவிழாவை கொண்டாடும் இந்த மங்கலகரமான தருணத்தில், அந்தப் போராட்டத்தில் பங்கெடுத்த தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், துறவிகள் ஆகியோரை முழு தேசமும் நன்றியுடன் நினைவு கூர்ந்து போற்றியது.

சுதந்திரத்திற்குப் பிறகு, பல்வேறு துறைகளில் நாம் குறிப்பிடத்தக்க சாதனை படைத்தோம். உலகின் முன்னணி பொருளாதார நாடுகளில் ஒன்றாக பாரதம் எழுச்சி பெற்று வருகிறது. பாரதத்தின் சிரஞ்சீவியான பண்புகளின் அடிப்படையில் நிகழும் மறுமலர்ச்சியை ஒட்டுமொத்த உலகமே ஏற்றுக் கொள்கிறது. ’வசுதைவ குடும்பகம்’ என்ற கருத்தியல் ரீதியிலான கட்டமைப்பின் அடிப்படையில் உலகம் அமைதிகரமாக வாழ்வதை உறுதிப்படுத்துதல், யாவரும் சோதரே எனும் சூழல், மனித குல நல்வாழ்வு ஆகியவற்றை சாதிக்கும் திசையில் பாரதம் முன்னேறி வருகிறது.
நன்கு ஒருங்கிணைந்த, புகழோங்கிய, சுபிட்சமான தேசத்தைக் கட்டமைக்கும் பணியில் முன்னிற்கும் சவால்கள் இவை என்று அகில பாரதிய பிரதிநிதி சபா கருதுகிறது.: சமுதாயத்தின் அனைத்துப் பிரிவினரின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்வது; முழுமையான வளர்ச்சிக்கான வாய்ப்புகளைக் கண்டறிவது; நவீனம் என்பது குறித்த பாரதிய சிந்தனையின் அடிப்படையில் புதிய முன்மாதிரியைக் கட்டமைக்க தொழில்நுட்பத்தை நியாயமான விதத்தில் பயன்படுத்தி, சுற்றுச்சூழல் சார்ந்த வளர்ச்சி காண்பது. தேசத்தை மறு நிர்மாணம் செய்வதன் பொருட்டு குடும்ப முறைகளை வலுப்படுத்துதல், இணக்கமான சமுதாயத்தை அடிப்படையாகக் கொண்ட சகோதரத்துவம், சுதேசிய சிந்தனை அடிப்படையிலான தொழில் முனைவை மேம்படுத்துதல் போன்ற இலக்குகளை அடைவதற்காக விசேஷ முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக, இந்தப் பணிக்காக இளைஞர்கள் ஒருங்கிணைந்த விதத்தில் முயற்சி செய்ய வேண்டும். சுதந்திரப் போராட்ட காலத்தில் அன்னிய ஆதிக்கத்தில் இருந்து விடுதலை அடைவதற்காக தன்னல மறுப்பும் தியாகமும் இன்றியமையாதவையாக இருந்தன. இன்றைய சூழலில், மேற்குறிப்பிட்ட இலக்குகளை அடைய காலனிய மனநிலையில் இருந்து விடுதலை பெற்ற சமூக வாழ்வைக் கட்டமைத்து, குடிமைப் பணியில் ஈடுபடச் செய்வது அவசியம். இந்த நோக்கத்தில்தான், சுதந்திர தின விழாவின்போது பாரத பிரதமர் முன்வைத்த ஐந்து சபதங்கள் (பஞ்ச்ச ப்ரன) முக்கியத்துவம் பெறுகின்றன.

பாரதத்தின் மீது பல்வேறு நாடுகள் மதிப்பும் நல்லெண்ணமும் வைத்திருக்கும் அதே நேரத்தில், சுயத்தன்மையின் அடிப்படையிலான பாரதிய மறுமலர்ச்சியை உலகில் உள்ள சில சக்திகள் விரும்பவில்லை என்பதையும் அகில பாரத பிரதிநிதி சபா சுட்டிக்காட்ட விரும்புகிறது. சமுதாயத்தில் பரஸ்பரம் நம்பிக்கையின்மையை உருவாக்குதல், திட்டமிட்டு வெறுப்பை விதைத்தல், சுயநலத்தையும் பிரிவினையையும் தூண்டி அராஜகம் செய்தல் போன்ற புதிய சதிகளைக் கட்டவிழ்ப்பதன் மூலம், பாரதத்தின் உள்ளேயும் வெளியேயும் இந்தச் சக்திகள் ஹிந்துத்துவத்துக்கு எதிராகச் செயல்படுகின்றன. இவை அனைத்திலும் விழிப்புடன் இருப்பதுடன், இந்தச் சக்திகளை நாம் தோற்கடிப்பதும் அவசியம்.

உலக தலைமையை பாரதம் ஏற்பதற்காக ஒருங்கிணைந்து முயற்சிகள் செய்யும் வாய்ப்பை, இந்த ‘அமுத காலம்’ (வரும் இருபதைந்து ஆண்டுகள்) நமக்கு வழங்குகிறது. கல்வி, பொருளாதாரம், சமூகம், ஜனநாயகம், நீதிமுறைகள் உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் சமகால முறைகளை உருவாக்கவும் உலகம் நல்வாழ்வு காண உறுதியேற்ற வளமான, வலிமையான நாடு என்ற நிலையை பாரதம் எட்டுவதற்காகவும் நடைபெறும் இந்த முயற்சியில், விவரமறிந்தோர் உள்ளிட்ட அனைத்து மக்களும் முழு சக்தியுடன் பங்கேற்க வேண்டும் என்று அகில பாரதிய பிரதிநிதி சபா அழைப்பு விடுக்கிறது.


Share it if you like it