பயங்கரவாத இயக்கத்துக்கு நிதியுதவி: தமிழகத்தைச் சேர்ந்தவர் லண்டனில் கைது!

பயங்கரவாத இயக்கத்துக்கு நிதியுதவி: தமிழகத்தைச் சேர்ந்தவர் லண்டனில் கைது!

Share it if you like it

ஈரான் ஆதரவு பெற்ற ஹிஜ்புல்லா பயங்கரவாத இயக்கத்திற்கு நிதியுதவி செய்த குற்றச்சாட்டில், லண்டனில் இந்தியர் ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

ஈரான் நாட்டின் ஆதரவுடன் லெபனான் நாட்டில் ஹிஜ்புல்லா என்ற பயங்கரவாத இயக்கம் செயல்பட்டு வருகிறது. இந்த இயக்கத்தை 2019-ம் ஆண்டு பயங்கரவாத இயக்கம் என்று வகைப்படுத்திய இங்கிலாந்து அரசு, மேற்கண்ட இயக்கத்திற்கு நிதியுதவி உள்ளிட்ட உதவிகளை செய்பவர்களுக்கு எதிரான நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. இதற்காக சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்புடன் பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்து வருகிறது.

இந்த நிலையில், பயங்கரவாதத்திற்கு நிதி வழங்கும் செயலில் ஈடுபட்டதாகக் கூறி, நசீம் சையது அகமது என்பவரை லண்டன் பெருநகர போலீசார் கைது செய்திருக்கிறார்கள். இதன் தொடர்ச்சியாக, மேற்கு லண்டன் நகரில் வைத்து இந்தியாவைச் சேர்ந்தவரான சுந்தர் நாகராஜன் என்கிற காசி விஸ்வநாதன், நாகா என்கிற நாகராஜன் சுந்தர் பூங்குளம் என்பவரையும் போலீஸார் கைது செய்திருக்கிறார்கள். இவர், தமிழகத்தின் மதுரையில் பிறந்தவர். சர்வதேச கைது வாரண்டின் கீழ் கைது செய்யப்பட்ட சுந்தர், அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்படவிருக்கிறார்.

நசீம் அகமது மற்றும் அவரது நிறுவனங்கள் பெரியளவில் பயங்கரவாத குழுக்களுக்கு நிதியுதவி வழங்கி இருக்கின்றன. நசீமுக்கு சர்வதேச கணக்காளராக சுந்தர் நாகராஜன் செயல்பட்டு வந்திருக்கிறார். கலை பொருட்கள் சேகரிப்பாளராகவும், வைர வியாபார டீலராகவும் நசீம் செயல்பட்டு வருகிறார் என்று கூறப்படுகிறது. இவருக்கு எதிராகவும் மற்றும் இவருடைய கூட்டாளிகள் பலருக்கு எதிராகவும் இங்கிலாந்து அரசு இன்று தடைகளை அறிவித்திருக்கிறது. இந்த பெரிய நெட்வொர்க்கானது ஹாங்காங், தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் செயல்பட்டு வருகிறது. இதற்கான நிதியுதவிகளை செய்வதற்கான மத்திய மேலாளராக நாகராஜன் இருந்து வந்திருக்கிறார்.


Share it if you like it