’லவ் ஜிஹாத் –  புத்தகம் போட்டு வெளுத்து வாங்கிய – செளமியா தினேஷ்..! 

’லவ் ஜிஹாத் –  புத்தகம் போட்டு வெளுத்து வாங்கிய – செளமியா தினேஷ்..! 

Share it if you like it

பெண்களுக்கு எதிராக நடக்கும் அடக்குமுறை மற்றும் மனிதநேயமற்ற பல வன்கொடுமை சம்பவங்களும். நீதி வேண்டி நடைபெறும் போராட்டங்களும், புரட்சி சம்பவங்களும், ஆங்காங்கே இன்று வரை நிகழ்ந்த வண்ணம் உள்ளது.  ஆனால் அதே பெண்களுக்கு எதிராக கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக., நடந்து கொண்டிருக்கும் வன்கொடுமை எதுவென்றால்., அது லவ் ’ஜிஹாத்’ என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது. இதைப் பற்றி எந்த ஒரு ஊடகமும், பத்திரிக்கைகளும், மக்களுக்கு பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்தவில்லை என்பது நிதர்சனம்.

லவ் ’ஜிஹாத்’ வழக்கில் ஒரு ஆண் கைது செய்யப்பட்டால். காதலுக்கு எதிரான போராட்டம் என பொய் கோஷம். போட பல இடதுசாரிகளும், பத்திரிக்கையாளர்களும், முயல்வது இந்நாட்டு பெண்களின் சாபக்கேடு என்பது கசப்பான உண்மை. ஒரு பெண்ணும் ஒரு ஆணும் காதலிப்பது தவறில்லை, அந்த ஆண் வேறொரு மதம் ஆயினும் தவறொன்றுமில்லை. ஆனால் அவர் தன்னை இந்துவாக பாவித்துக் கொண்டு. அந்தப் பெண்ணிடம் பழகி ஏமாற்றினாலோ, அல்லது பழகிய பின்பு மதம் மாறினால் தான் திருமணம் என்று கட்டாயப்படுத்தினாலோ அதை கலப்பு திருமணம் என்று  கருதக் கூடாது.

’நிகிதா டோமர்’ என்னும் இளம்பெண் தன் தோழியுடன் கல்லூரி தேர்வினை முடித்து விட்டு. வீடு திரும்பும் போது, ஒரு முஸ்லிம் வாலிபர் அவரை பட்டப்பகலில் துடிக்கத்துடிக்க கொன்று விட்டு செல்கிறார். காரணம் அந்தப் பெண் மதம் மாறி திருமணம் செய்ய ஒப்புக்கொள்ளாததே. ’நிகிதா தோமரின்’ தந்தை ஒரு பத்திரிகையாளரிடம் பேசும்பொழுது இதற்கு முன்பே நிகிதாவை அந்த வாலிபர் கடத்தி சென்று ஒரு இரவு முழுவதும் தன் வீட்டில் பதுக்கி வைத்து இருந்ததாக பகீர்  குற்றம் சுமத்தி இருந்தார்.

அதே வீட்டில் அந்த முஸ்லீம் வாலிபரின் தாயும் இருந்துள்ளார். அப்பெண்மணி நிகிதாவிடம் அன்றிரவு முழுவதும் மதம் மாறும் படி தொடர்ந்து மூளைச்சலவை செய்துள்ளார். நிகிதா ‘என்னால் முடியாது என்னை விட்டுவிடுங்கள்’ என்று எவ்வளவோ எடுத்துக் கூறியுள்ளார். ‘இரவு முழுவதும் நீ எங்கள் வீட்டில் இருந்ததால்.,  உன்னை யாரும் திருமணம் செய்து கொள்ள மாட்டார்கள். நீயாகவே சம்மதித்து விடு’ என்று தொடர்ந்து மிரட்டியுள்ளார் அந்த பெண்மணி.

நிகிதாவின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில். காவல்துறை அப்பெண்னை மீட்டு. அந்த இளைஞனை மிக கடுமையாக எச்சரித்து விட்டு., அப்பெண்ணின் வீட்டிற்கு அழைத்து வந்தது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக அன்றிலிருந்து பத்தாவது நாள் ’நிகிதாவை’ மிக கொடூரமாக கொன்று விட்டது அந்த மிருகம்.

இந்த சம்பவம் நமக்கு ஒரு உண்மையை வெளிப்படுத்தி உள்ளது. ’லவ் ஜிஹாத்’ அனைத்து தரப்பு மக்களிடையும் வெவ்வேறு விதத்தில் இன்று வரை அரங்கேறிக் கொண்டு தான் இருக்கிறது. இனி மேலும் இதை வெறும் ஹிந்துத்துவாதிகளின் பொய் பிரச்சாரம் என்று கருதினால். அதன் விளைவுகள் இன்னும் மோசமாக இருக்கும் என்பதை அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும்.

கேரளாவை சேர்ந்த கிறிஸ்தவ மதபோதகர் ஒருவர். தங்கள் மதத்தை சார்ந்த பெண்களை காதலில் சிக்க வைத்து கட்டாய மத மாற்றம் செய்யப்படுவதாக. அமித்ஷாவிடம் திடுக்கிடும் புகாரை தெரிவித்து இருந்தார் என்பதை யாரும் மறந்திருக்க முடியாது.

எனவே இந்த கட்டாய மதமாற்றத்தை தடுக்கவும். காதல் என்னும் பெயரில் பெண்களுக்கு எதிரான இக்குற்றங்களை முற்றிலுமாக அழிப்பது. நம் ஒவ்வொருவரின் சமூகப் பொறுப்பாகும். இன்று ’லவ் ஜிஹாத்திற்கு’ எதிராக., யோகி ஆதித்யநாத் கடுமையான சட்டங்களை இயற்றினாலும். இன்றைய ’கார்ப்பரேட்’ உலக பெண்களுக்கு ’லவ் ஜிஹாத்தின்’ இருண்ட பக்கங்கள் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ’லவ் ஜிஹாத்தின்’ உண்மை தன்மையை மறைப்பதில். இடதுசாரிவாதிகளும் சில இலக்கியவாதிகளும் போட்டி போட்டு கொண்டு செயல்படுவதன் விளைவே இது.

அதிகம் படித்த பெண்கள் கூட தவறான நபர்களை காதலித்து ஏமாறுகின்றனர். அவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக Souwmiya Dhinesh அவர்களின் இந்த ‘A Love Jihad Story’ புத்தகம் மிகவும் பயன் உள்ளதாக இருக்கும் என்பது திண்ணம். உண்மை சம்பவங்களின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ள இப்புத்தகம். சமுதாய பிரச்சனையை இளைய தலைமுறையினர். உணர்ந்து கொள்ளும் வண்ணம் படைக்கப்பட்டுள்ளது இதன் சிறப்பம்சம் ஆகும்.

’லவ் ஜிஹாத்தால்’ பாதிக்கப்பட்ட பெண்கள் தாமாகவே முன் வந்து தங்களுக்கு நடந்த அநீதிகளை வெளிப்படையாக பேசும் பொழுது மற்ற பெண்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்பதை மிக ஆழமாக பதிவிட்டுள்ளார் இதன் ஆசிரியர் என்பது குறிப்பிடத்தக்கது.

 


Share it if you like it