விவாதத்தை விட்டு வெளியேறிய மாஜி ராணுவ அதிகாரி: திடுக் தகவல்கள்!

விவாதத்தை விட்டு வெளியேறிய மாஜி ராணுவ அதிகாரி: திடுக் தகவல்கள்!

Share it if you like it

வன்னியரசு தெரிவித்த கருத்திற்கு ஓய்வு பெற்ற ராணுவ உயர் அதிகாரி தனது கடும் கண்டனத்தை பதிவு செய்து விட்டு, ஊடக விவாதத்தில் இருந்து பாதியிலேயே வெளியேறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் வன்னியரசு. இவர், தொடர்ந்து பாரத தேசத்திற்கு எதிராகவும், ஹிந்துக்களின் கலாச்சாரம், பண்பாடு மற்றும் பழக்க வழக்கங்களை மிக கடுமையாக விமர்சனம் செய்ய கூடியவர். இவர், ஒரு கிறிப்டோ கிறிஸ்தவர் என்றும் சொல்லப்படுகிறது.

Tamilar Kural - Devapriya- தேவப்ரியா- (Based on Archaelogical,Historical &  Theological): விசிக வன்னியரசு தந்தை கிறிஸ்தவ முறையில் அடக்கம் செய்யப்பட்டார்

நாட்டிற்கு எதிராக பேசுவதையே இன்று வரை தனது கொள்கையாக கொண்டவர். அந்த வகையில், தேசத்திற்கு எதிராகவும், பிரிவினையை தூண்டும் வகையிலும், செயல்படும் நபர்களை கண்காணித்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும் வகையில், கடந்த ஆண்டு என்.ஐ.ஏ. கிளையை மத்திய அரசு சென்னையில் துவங்கி இருந்தது. இதற்கு, வி.சி.க.வை சேர்ந்த மூத்த ஆபாச பேச்சாளர் வன்னியரசு தனது கடும் கண்டனத்தை பதிவு செய்து இருந்தார்.

இதையடுத்து, நியூஸ் 18 ஊடகம் ஏற்பாடு செய்து இருந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வன்னியரசு பிரதமர் மோடி மீது கொண்ட காழ்ப்புணர்ச்சியின் காரணமாக பிரதமரை கொலைகாரன் என தனது வன்மத்தை வெளிப்படுத்தி இருந்தார். இதனை கண்டிக்க வேண்டிய நெறியாளர் தம்பி தமிழரசன் வன்னியரசுக்கு ஆதரவாக நடந்து கொண்டார் என நெட்டிசன்கள் பலர் கருத்து தெரிவித்து இருந்தனர்.

இப்படிப்பட்ட சூழலில் தான், நியூஸ் 7 தமிழ் ஏற்பாடு செய்த ஊடக விவாதத்தில் ஓய்வு பெற்ற ராணுவ உயர் அதிகாரி கர்னல் தியாகராஜன் மற்றும் வன்னியரசு உள்ளிட்ட சில முக்கிய விருந்தினர்கள் கலந்து கொண்டனர். அப்போது, வன்னியரசு பேசியதாவது;

கொரோனா காலத்தில் நாட்டு மக்களை எப்படி பாரதப் பிரதமர் மோடி கைதட்ட சொன்னாரோ? லைட் பிடிக்க சொன்னாரோ அது போன்ற கேலி கூத்தாக இல்லம் தோறும் தேசிய கொடியை ஏற்ற சொன்ன நிகழ்வை நான் பார்க்கிறேன் என வி.சி.க.வை சேர்ந்த மூத்த ஆபாச பேச்சாளர் வன்னியரசு தனது கீழ்த்தரமான வக்கிர புத்தியை வெளிப்படுத்தி இருந்தார்.

இதற்கு, ஓய்வு பெற்ற இராணுவ உயர் அதிகாரி கர்னல் தியாகராஜன், தேசிய கொடியை மதிக்காத காரணத்தால் ஒரு இராணுவ வீரனாக மற்றும் ஒரு இந்திய குடிமகனாக இந்த நிகழ்ச்சியை விட்டு வெளியேறுகிறேன். நியூஸ் 7 ஊடக விவாதத்தில் இனி எப்போதும் கலந்து கொள்ள மாட்டேன் என அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சீப்பு செந்தில், கார்த்திகை செல்வன், கார்த்திகேயன், தம்பி தமிழரசன் மற்றும் சுகிதா உள்ளிட்ட நெறியாளர்கள் அனைவருமே தி.மு.க.வின் விசுவாசிகள் அவர்களிடம் நேர்மையான விவாதத்தை எதிர்பார்க்க முடியுமா? என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


Share it if you like it