பொய் செய்தி: மீண்டும் அசிங்கப்பட்ட மதன் கெளரி!

பொய் செய்தி: மீண்டும் அசிங்கப்பட்ட மதன் கெளரி!

Share it if you like it

கர்நாடகாவில் ஹிந்து மாணவர்கள் தேசியக் கொடியை இறக்கிவிட்டு காவிக் கொடியை ஏற்றியதாக யூடியூப்பர் மதன் கெளரி தவறான செய்தியை பரப்ப முயன்று மீண்டும் அசிங்கப்பட்ட சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

கர்நாடக மாநிலம் உடுப்பி அரசு கல்லூரியில் பயிலும் இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் சிலர், கல்லூரி நிர்வாகத்தின் சட்ட, திட்டங்களுக்கு கட்டுப்படாமல், பர்தா அணிந்து வந்துள்ளனர். மேலும், பர்தா அணிவது எங்கள் உரிமை, கடமை என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்களின் இந்த ஆணவ பேச்சிற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, ஹிந்து மாணவிகளும், மாணவர்களும் காவி நிறத்தில் உடை அணிந்து வந்து, எங்களுக்கும் உரிமையுள்ளது என்று சொல்லி, பதிலுக்கு களத்தில் இறங்கி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதுதான் கர்நாடகாவில் நிகழ்ந்த உண்மை சம்பவம் என்று அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

உண்மை இவ்வாறு இருக்க, தி.மு.க. ஆசிபெற்ற ஊடகங்கள், பத்திரிகைகள், நெறியாளர்கள் தவறான தகவல்களை மக்களிடையே பரப்ப முயன்று வருகின்றனர். அந்த வகையில், கர்நாடகாவில் இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் பர்தா அணிவது தொடர்பாக எழுப்பிய சர்ச்சை தொடர்பான முழு தகவல் வெளி வருவதற்கு முன்பே, ஹிந்து மாணவர்கள் தேசியக் கொடியை இறக்கிவிட்டு காவிக் கொடியை ஏற்றியதாக தி.மு.க.வின் தீவிர ஆதரவாளர் என்று அழைக்கப்படும் யூடியூப்பர் மதன் கெளரி, பொய்த் தகவலை பரப்பினார். ஆனால், இது உண்மை இல்லை என்பது தெரிந்து தற்போது அசிங்கப்பட்டு நிற்கிறார். இச்சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் சிரிப்பலையை ஏற்படுத்தி இருக்கிறது.


Share it if you like it