பாபா மஹாகாள் ஊர்வலத்தின்போது ஹிந்துக்கள் மீது எச்சில் துப்பிய 3 இஸ்லாமிய இளைஞர்களை உஜ்ஜைனி போலீஸார் கைது செய்தனர்.
மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைனியில் ஆண்டுதோறும் ஷாவான் மாதத்தின் 2-வது திங்கள்கிழமையன்று பாபா மஹாகால் ஊர்வலம் நடந்து வருகிறது. அந்த வகையில், 2-வது திங்கள்கிழமையான நேற்று முன்தினம் மஹாகால் ஊர்வலம் நடந்தது. ஊர்வலம் ஷிப்ரா ஆற்றின் குறுக்கே கரகுவான் காவல் நிலையப் பகுதியான இருப்புத் தொட்டியைக் கடந்து சென்று கொண்டிருந்தது. இது முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதியாகும். அப்போது, ஒரு வீட்டில் மாடியில் நின்றிருந்த இஸ்லாமிய இளைஞர்கள் சிலர், ஊர்வலத்தில் சென்று கொண்டிருந்த ஹிந்து பக்தர்கள் மீது எச்சில்களை துப்பினர். பக்தர்கள் பலரும் எச்சரிக்கை விடுத்தும் அவர்கள் தொடர்ந்து எச்சிலை துப்பிக் கொண்டே இருந்தனர்.
இதையடுத்து, முஸ்லீம் இளைஞர்களை எச்சில் துப்புவதை பக்தர்கள் சிலர் வீடியோ எடுத்தனர். பின்னர், ஊர்வலம் முடிந்ததும், விஷ்வ ஹிந்து பரிஷத் மற்றும் பஜ்ரங் தள் அமைப்பினர் கரகுவான் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். பா.ஜ.க. தலைவர் மசூம் ஜெய்ஸ்வாலும் காவல் நிலையத்துக்கு வந்து, குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கோரினார். இதன் பேரில், இந்திய தண்டனைச் சட்டம் 295A, 153A, 296, மற்றும் 505 ஆகிய பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். தொடர்ந்து, 3 முஸ்லீம் இளைஞர்களையும் போலீஸார் கைது செய்தனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறுகையில் 3 முஸ்லீம் இளைஞர்களில் 2 பேர் சிறுவர்கள் என்று தெரிவித்தனர்.