என்னையும் மதம் மாத்தப் பாத்தாங்க: மதுரை ஆதீனம் பகீர் தகவல்!

என்னையும் மதம் மாத்தப் பாத்தாங்க: மதுரை ஆதீனம் பகீர் தகவல்!

Share it if you like it

மதுரை ஆதீனத்தின் புதிய மடாதிபதியாக சமீபத்தில் பதவியேற்றிருக்கும் ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், தன்னையும் மதம் மாற்ற முயற்சி நடந்ததாக அதிர்ச்சித் தகவலை தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

மதுரை ஆதீனத்தின் 293-வது மடாதிபதியாக சமீபத்தில் பொறுப்பேற்றுக் கொண்டவர் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹரர் ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள். இவர் பதவியேற்றுக் கொண்ட பின்பு, ஹிந்து மதம், பாரத தேசம், ஆன்மிகம், கோவில்கள் பற்றிய தனது மனதிலுள்ள எண்ணங்களை ஒளிவு மறைவின்றி அப்படியே பேசக் கூடியவர். குறிப்பாக, விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு அனுமதி கொடுக்காமல், தி.மு.க. அரசு உள்நோக்கத்துடன் செயல்பட்டபோது, முதன் முதலாக குரல் கொடுத்தவர் மதுரை ஆதீனம்தான்.

‘விநாயகர் சதுர்த்தி இன்று நேற்றல்ல, வெள்ளையர்களை எதிர்த்து கொண்டாப்பட்ட விழா. அதற்குத் தடை விதித்திருப்பது சரியல்ல. விநாயகர் சதுர்த்தியை தமிழக அரசு ஏற்று நடத்த வேண்டும் என்று கருத்துத் தெரிவித்திருந்தார். மேலும், மதுக்கடைகளால் மாணவர் சமுதாயம் பாழ்படுகிறது. ஆகவே, மதுக்கடைகளை உடனே மூட வேண்டும் என்றும் தி.மு.க. அரசுக்கு மிகவும் துணிச்சலாக அறிவுரை வழங்கியவர். இப்படி தி.மு.க. அரசு செய்யும் தவறுகளையும், செய்யத் தவறிய விஷயங்களையும் சுட்டிக்காட்டி, தனது பணியை இன்று வரை சிறப்பாக மேற்கொண்டு வருகிறார்.

இந்த நிலையில்தான், பிரபல நெறியாளரான ரங்கராஜ் பாண்டேவின் இணையதள ஊடகமான சாணக்கியாவிற்கு அவர் அளித்த பேட்டியில், தான் பள்ளியில் படிக்கும் சமயத்தில், தன்னையும் மதம் மாற்ற முயற்சி நடந்ததாகவும், ஆகவே, தமிழகத்தில் கட்டாய மதம் மாற்றுத் தடைச்சட்டம் அவசியம் வேண்டும் என்றும் மனம் திறந்து கூறியிருக்கிறார். மதுரை ஆதீனத்தின் இக்கருத்து நெறியாளர் உட்பட பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Image
Image

Share it if you like it