ஆதீனம் என்றால் பதுங்கி இருக்க முடியாது: ஜால்ரா அடிக்க முடியாது – மதுரை ஆதீனம் ஓபன் டாக்!

ஆதீனம் என்றால் பதுங்கி இருக்க முடியாது: ஜால்ரா அடிக்க முடியாது – மதுரை ஆதீனம் ஓபன் டாக்!

Share it if you like it

ஆதீனம் என்றால், பதுங்கி கிடக்க முடியாது. ஜால்ரா அடிக்க முடியாது என மதுரை ஆதீனம் பேசி இருப்பது ஆளும் கட்சிக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் இருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ஹிந்துக்களுக்கு எதிராக தி.மு.க அரசு ஏதேனும் நடவடிக்கை எடுத்தால், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக முதன் முதலில் குரல் கொடுக்கும் நபராக இருப்பவர் மதுரை ஆதீனத்தை சேர்ந்த ஸ்ரீலஸ்ரீ ஹரிஹரர் ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது. அந்தவகையில், விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் அறவழி காட்டும் ஆன்றோர் பேரவை சார்பில் இன்று (4.6.2022) மதுரையில் பரவை ஆகாஷ் மகாலில் 2 நாட்கள் இம்மாநாடு நடை பெறுகிறது. அந்தவகையில், இந்த மாநாட்டில் கலந்து கொண்ட மதுரை ஆதீனம் பேசியதாவது: கோயிலை தனித்து இயங்கும் வாரியத்திடம் ஒப்படைக்க வேண்டும் என போராட்டம் நடத்தினோம். கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் விபூதி பூச மறுக்கின்றனர். கோயில் சொத்துகளுக்கு குத்தகை, வாடகை பணம் முறையாக வருவதில்லை. இதைபற்றி கேட்டால், பேசினால் இடையூறு செய்கிறீர்களா என கேட்கின்றனர். ஆதீனம் என்றால், பதுங்கி கிடக்க முடியாது. ஜால்ரா அடிக்க முடியாது. ஹிந்துக்களுக்கு ஒற்றுமை ஏற்படுத்த வேண்டும். இதையெல்லாம் பேசியதனால் பிரதமரிடம் நான் பேச வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது என்று குறிப்பிட்டு இருந்தார்.

இதையடுத்து, பேரூர் ஆதீனம் மருதாசல அடிகள் பேசியதாவது; மதமாற்றத்தை தடுக்க வேண்டும். சமுதாய நல்லிணக்கம் ஏற்படுத்துவதுடன், சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும். தனித்து இயங்கும் வாரியத்தின் கீழ் கோயிலை கொண்டு வர வேண்டும் என தனது எண்ணத்தை அம்மாநாட்டில் தெரிவித்து இருந்தார். இந்நிகழ்ச்சியில், வி.எச்.பி., அகில உலக பொதுச்செயலர் மிலிந்த் பராண்டே, அயோத்தி ராமர் கோவில் கட்டுமான குழு பொருளாளர் கோவிந்தகிரி மகராஜ் பங்கேற்றனர். நாளை (5.6.2022) மாலை 5 மணியளவில் பழங்காநத்தத்தில் பொதுக்கூட்டம் நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. மதமாற்றத்தை தடுப்பது, தாய் மதத்திற்கு திரும்புவோரை ஊக்குவிப்பது, கிராமங்களில் துறவியர் தங்கி தொண்டாற்றி ஏற்றத்தாழ்வுகளை போக்குவது குறித்து இம்மாநாட்டில் பேசப்படும் என்று அங்கிருந்து தகவல்கள் வருகின்றன.

Image
Image

Share it if you like it