தேவாலங்களை சீரமைக்க நிதி, உபதேசியார்களுக்கு நல வாரியம், கிறிஸ்தவ மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன், கன்னியாஸ்திரிகளுக்கு வழங்கப்படும் மானியம் உயர்வு என கிறிஸ்தவ சமுதாய மக்களுக்கு ஏராளமான நன்மைகளை தி.மு.க. அரசு செய்திருக்கிறது என்று முதல்வர் ஸ்டாலின் கூறியிருக்கிறார். ஆகவே, இது கிறிஸ்தவ மக்களுக்கு மட்டுமான அரசா என்று ஹிந்துக்கள் கேள்வி எழுப்பி இருக்கிறார்கள்.
தி.மு.க.வைப் பொறுத்தவரை ஹிந்துக்களுக்கு விரோதமான கட்சி என்பது அனைவரும் அறிந்ததே. பிற மத நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும்போது, ஹிந்து மத சடங்கு சம்பிரதாயங்களை இழிவாகப் பேசுவது, ஹிந்துக் கோயில்களை ஆபாசமாக விமர்சிப்பது, ஹிந்து தெய்வங்களை மிகவும் கேவலமாக குறிப்பிடுவது, ஹிந்துக்களை விபசாரிகளின் மகன்கள் என்று கூறுவது என்பன போன்ற ஹிந்து விரோத செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
அதேபோல, ஹிந்து கோயில்களை அரசின் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு, அதன் மூலம் கிடைக்கும் வருவாயை கோயில்களுக்கு செலவிடாமல், பிற மத வளர்ச்சிக்கு பயன்படுத்துவது, அரசின் இதர தேவைகளுக்கு பயன்படுத்துவது என்பன போன்ற அராஜக செயல்களிலும் ஈடுபட்டு வருகிறது. தவிர, கோயில்களில் அர்ச்சகர்களாக இருக்கும் ஹிந்துக்களுக்கு ஊதியம் கொடுக்காமல், மசூதி, சர்ச் போன்ற பிற மத வழிபாட்டுத் தலங்களில் பணிபுரியும் உபதேசியார்கள், மதகுருமார்களுக்கு ஊதியத்தை உயர்த்தி வழக்குவது போன்ற அத்துமீறல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுபோன்ற தி.மு.க. அரசின் செயல்பாடுகளால், அக்கட்சியினர் மீதும், அக்கட்சியின் அரசு மீதும் ஹிந்துக்கள் கடும் அதிருப்தியிலும், ஆத்திரத்திலும் இருந்து வருகிறார்கள். இந்த சூழலில்தான், மதுரையில் பெந்தேகோஸ்தே சபையின் தேசிய மாநாடு நடந்தது. இம்மாநாட்டில் காணொளிகாட்சி மூலம் கலந்துகொண்ட ஸ்டாலின் பேசியபோது, “கிறிஸ்தவ சமுதாய மக்களுக்கு ஏராளமான நன்மைகளை தி.மு.க. அரசு செய்து கொடுத்திருக்கிறது. தேவாலயங்களை சீரமைக்க 5 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. உபதேசியார் நல வாரியம் அமைக்கப்பட்டிருக்கிறது. கிறிஸ்தவ மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் தருவதற்கு 2 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.
சிறுபான்மையினர் பள்ளிகளுக்கான அனுமதிக்காக மைனாரிட்டி ஸ்டேட்டஸ் சர்டிபிகேட் இணையத்தின் மூலம் பெறுவதை எளிமையாக்கி இருக்கிறோம். சிறுபான்மையினர் விடுதி மாணவ, மாணவிகளுக்கு சிறுபான்மையினர் பண்டிகை நாட்களில் சிறப்பு உணவு வழங்கப்படும் என்று அறிவித்திருக்கிறோம். சிறுபான்மையினர் அதிகம் வசிக்கக்கூடிய மாவட்டங்களில் புதிய பணியிடங்களுடன் அலுவலகம் அமைக்கப்பட இருக்கிறது. கரூர், மதுரை, தேனி ஆகிய 3 மாவட்டங்களில் ஒரு கிறிஸ்தவ உதவி சங்கம் கூடுதலாக தொடங்க நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது.
ஜெருசலேமுக்கு புனித பயணம் செல்வதற்கு அருட் சகோதரிகள், கன்னியாஸ்திரிகளுக்கு வழங்கப்படும் மானியம் உயர்த்தி வழங்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் அதிக கடன்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இவை அனைத்தும் கிறிஸ்தவ சமூக மக்களுக்கு கடந்த 20 மாத காலத்தில் செய்து தரப்பட்டுள்ள நலத்திட்டங்கள். தி.மு.க. அரசை பொறுத்தவரை, நீங்கள் கோரிக்கை வைத்துத்தான் நாங்கள் நிறைவேற்ற வேண்டும் என்ற நிலை இல்லை. நாங்களாகவே பல்வேறு திட்டங்களை, நீங்கள் கோரிக்கை வைக்காமலேயே நிறைவேற்றிக்கொண்டுதான் இருக்கிறோம்” என்று கூறியிருக்கிறார்.
இதுதான் ஹிந்துக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. காரணம், ஹிந்து கோயில்களில் பணிபுரியும் பூசாரிகளுக்கு சொற்ப அளவிலான சம்பளமே வழங்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து பூசாரிகள் பேரவை சார்பில் பலமுறை மனு கொடுத்தும், தி.மு.க. அரசு கண்டுகொள்ளவில்லை. அதேபோல, ஹிந்து கோயில்கள் மூலம் கிடைக்கும் வருவாய், ஹிந்து கோயில்களின் வளர்ச்சிக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்பதுதான் விதி. ஆனால், கோயில்களில் இருந்து கிடைக்கும் வருவாயை அரசு வேறு பல வளர்ச்சிப் பணிகளுக்கு எடுத்துக் கொள்வதோடு, குறிப்பிட்ட காலத்தில் கோயில்களை புனரமைத்து கும்பாபிஷேகத்தை நடத்துவதும் கிடையாது. இதுபோன்ற காரணங்கள்தான் தி.மு.க. அரசை ஹிந்துக்கள் வெறுப்பதற்கு காரணமாக இருக்கின்றன.