மதுரையில் ஆயுத பயிற்சி: பி.எஃப்.ஐ. நிர்வாகி கைது!

மதுரையில் ஆயுத பயிற்சி: பி.எஃப்.ஐ. நிர்வாகி கைது!

Share it if you like it

மதுரையில் இஸ்லாமிய இளைஞர்களுக்கு ஆயுதப் பயிற்சி அளித்து வந்த, தடை செய்யப்பட்ட ‘பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா’ அமைப்பின் நிர்வாகி கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நாடு முழுவதும் செயல்பட்டு வந்த இஸ்லாமிய அமைப்பு பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா. இந்த அமைப்பினர் மீது, பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி திரட்டுதல், பயங்கரவாத பயிற்சி அளித்தல், நாட்டுக்கு எதிராக பிரிவினையை தூண்டுதல் உள்ளிட்ட பல்வேறு தேச விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இது தொடர்பாக, என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி, அல்கொய்தா உள்ளிட்ட அண்டை நாட்டு பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருந்து பலரையும் கைது செய்து வந்தனர். இந்த சூழலில். என்.ஐ.ஏ., சி.பி.ஐ., அமலாக்கத்துறை உள்ளிட்ட துறை அதிகாரிகள், கடந்த செப்டம்பம் மாதம் தமிழகம் உட்பட 20-க்கும் மேற்பட்ட மாநிலங்களில், பி.எப்.ஐ. நிர்வாகிகளின் வீடுகள், அலுவலகங்களில் சோதனையில் ஈடுபட்டனர். இதில், முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது. இதையடுத்து, பி.எஃப்.ஐ. மற்றும் அதன் துணை அமைப்புகள் 5 ஆண்டுகாலத்துக்கு இந்திய அரசால் தடை செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, பி.எஃப்.ஐ. அமைப்பை கலைப்பதாக அதன் நிர்வாகிகள் அறிவித்திருந்தனர்.

இந்த நிலையில்தான், மதுரையில் இஸ்லாமிய இளைஞர்களுக்கு பயங்கரவாத பயிற்சி அளித்ததாக, பி.எஃப்.ஐ. அமைப்பைச் சேர்ந்தவர் கைது செய்யப்பட்டிருக்கிறது. நெல்பேட்டை சுங்கம்பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்தவர் உமர் ஷெரீப். ஆட்டோ டிரைவரான இவர், பி.எப்.ஐ. அமைப்பிலும் நிர்வாகியாக இருந்து வருகிறார். இவரது வீட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் திடீர் சோனையில் ஈடுபட்டனர். அப்போது, அவரது வீட்டிலிருந்து கத்தி, அரிவாள், வாள், சுருள் கத்திகள் உள்ளிட்ட பயங்கரவாத செயல்களுக்கு பயன்படுத்தப்படும் ஆயுதங்களை கைப்பற்றி இருக்கிறார்கள். மேலும், இது தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகுமாறு உமர் ஷெரீப்புக்கு சம்மன் அனுப்பினர். அதன்படி, சென்னையிலுள்ள என்.ஐ.ஏ. அலுவலகத்தில் உமர் ஷெரீப் ஆஜரான நிலையில், அவரை மதுரைக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். அப்போது, இஸ்லாமிய இளைஞர்களை மூளைச்சலவை செய்து, பயங்கரவாத செயலுக்கு தயார் படுத்தியதும், ஆயுதப் பயிற்சி அளித்து வந்ததையும் உமர் ஒப்புக் கொண்டார். இதையடுத்து, உமர் ஷெரீப்பை கைது செய்தனர். ஏற்கெனவே, பி.எஃப்.ஐ. அமைப்பைச் சேர்ந்த 9 பேர் கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில், தற்போது 10-வது நபராக உமர் கைது செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it