பர்தா அணிய மறுத்த ஹிந்து மனைவி கொலை: குடும்பத்துடன் முகமது இக்பால் ஷேக் கைது!

பர்தா அணிய மறுத்த ஹிந்து மனைவி கொலை: குடும்பத்துடன் முகமது இக்பால் ஷேக் கைது!

Share it if you like it

ஹிஜாப், பர்தா, புர்கா அணிவது உட்பட முஸ்லிம்கள் மத வழக்கத்தை கடைப்பிடிக்க மறுத்த ஹிந்து மனைவியை கத்தியால் குத்திக் கொலை செய்த கணவர் முகமது இக்பால் ஷேக்கை போலீஸார் கைது செய்தனர்.

மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள திலக் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ரூபாலி சந்தன்ஷிவ். அதே பகுதியைச் சேர்ந்தவர் முகமது இக்பால் ஷேக். இவருக்கு ஏற்கெனவே திருமணமாகி விட்டது. ஆனால், குழந்தை இல்லாத காரணத்தால் முதல் மனைவியை விவாகரத்து செய்து விட்டார். பின்னர், ஹிந்து பெண்ணான ரூபாலியை காதல் வலையில் வீழ்த்திய இக்பால் முகமது ஷேக், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமும் செய்து கொண்டார். இத்தம்பதிக்கு 2 வயதில் ஒரு ஆண் குழந்தை இருக்கிறது. இந்த சூழலில், திருமணமான நாளில் இருந்தே, ரூபாலியை ஹிஜாப், பர்தா, புர்கா அணிய வேண்டும் என்றும் முஸ்லிம் மத சடங்குகளையும், நடைமுறைகளையும் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் இக்பாலும், அவரது குடும்பத்தினரும் கூறி வந்திருக்கிறார்கள்.

ஆனால், ரூபாலி இதை ஏற்க மறுத்து விட்டார். இதனால், கணவன், மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டிருக்கிறது. மேலும், இது தொடர்பாக மாமியாருக்கும் ரூபாலிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு வந்திருக்கிறது. பர்தா அணியச் சொல்லி தொடர்ந்து வலியுறுத்தி வந்ததால், ரூபாலி விரக்தியடைந்தார். எனவே, கடந்த சில மாதங்களுக்கு கணவருடன் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறினார். பின்னர், ஏற்கெனவே குடியிருந்த அதே திலக் நகர் பகுதியிலேயே மீண்டும் தனியாக வீடு வாடகைக்கு எடுத்து வசிக்கத் தொடங்கினார். எனினும், கணவன், மனைவி இருவரும் அடிக்கடி போனில் பேசி வந்திருக்கிறார்கள். அப்போதெல்லாம், தனது தாயார் சொல்படி கேட்டு நடக்கும்படி இக்பால் கூறிவந்திருக்கிறார்.

மேலும், மகனை அழைத்துக் கொண்டு வீட்டுக்கு வரும்படி கூறியிருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த ரூபாலி, தன்னால் இஸ்லாமிய மத சடங்குகளை கடைப்பிடிக்க முடியாது என்று மறுத்துவிட்டதோடு, தனக்கு விவாகரத்து அளிக்கும்படி இக்பாலிடம் கேட்டு வந்திருக்கிறார். இந்த சூழலில், இது தொடர்பாக நேற்று முன்தினமும் ரூபாலி மற்றும் இக்பால் இடையே தொலைபேசியில் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. இதையடுத்து, நேராக ரூபாலி வீட்டுக்குச் சென்றிருக்கிறார் இக்பால். அங்கு,மகனை அழைத்துக் கொண்டு வீட்டுக்கும் படி கூறியிருக்கிறார். ஆனால், ரூபாலி மறுத்துவிடவே, ஆத்திரமடைந்த இக்பால், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ரூபாலியின் கழுத்து, கை, மார்பு உள்ளிட்ட இடங்களில் சரமாரியாகக் குத்தி இருக்கிறார்.

இதில், பலத்த காயமடைந்த ரூபாலி கத்தி கூச்சல் போட்டிருக்கிறார். இதைக் கேட்டு அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்திருக்கிறார்கள். இதைக்கண்ட இக்பால் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டான். பின்னர், இதுகுறித்து போலீஸுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸார் வந்து ரூபாலியை மீட்டு சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ரூபாலி ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து, இக்பால் மற்றும் அவரது குடும்பத்தினரை போலீஸார் கைது செய்தனர்.

ஈரானில் ஹிஜாப்புக்காக மாஷா அமினி என்கிற இளம்பெண், போலீஸாரால் அடித்தே கொலை செய்யப்பட்டார். இந்தியாவில் பர்தாவுக்காக கணவராலேயே மனைவி கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டிருக்கிறார். ஹிஜாப், பர்தாவுக்காக இன்னும் எத்தனை உயிர்கள்தான் பறிபோகப்போகிறதோ என்று குமுறுகிறார்கள் மக்கள்.


Share it if you like it