இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்சே தீபாவளிக்கு வாழ்த்து..
ஹிந்துக்களின் பண்டிகையான தீபாவளிக்கு உலக நாடுகள் முதல் பாரதப் பிரதமர் மோடி, பல்வேறு மாநில முதலமைச்சர்கள், (தமிழக முதல்வர் ஸ்டாலினை தவிர) தங்கள் வாழ்த்து செய்திகளை தீபாவளி கொண்டாடிய ஹிந்துகளுக்கு தெரிவித்து இருந்தனர். இலங்கை மக்களுக்காக தொடர்ந்து போராடும் ஒரே கட்சி என்று தம்பட்டம் அடித்து கொள்ளும் தி.மு.க, வி.சி.க, தீபாவளி ஹிந்து பண்டிக்கை என்பதால் அவர்களுக்கு கூட ஒரு வாழ்த்து செய்தி அனுப்பாமல் தங்களது ஹிந்து விரோத போக்கை காட்டியுள்ளனர் என்பது நிதர்சனம்.
தமிழக மக்களின் உணர்வுகளை தூண்டி அதன் மூலம் தங்களுக்கு ஆதாயம் தேட முயலும் போலி இலங்கை போராளிகளின் உண்மையான சுயரூபத்தை தமிழக மக்களும் இலங்கை தமிழர்களும் இப்பொழுதாவது புரிந்து கொள்ள வேண்டும் என்று பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். .