மது தான் திராவிட மாடலா… ஸ்டாலினுக்கு ஒரு குத்து… திருமாவுக்கு ஒரு குத்து… மலேசிய அமைச்சர் சவுக்கடி!

மது தான் திராவிட மாடலா… ஸ்டாலினுக்கு ஒரு குத்து… திருமாவுக்கு ஒரு குத்து… மலேசிய அமைச்சர் சவுக்கடி!

Share it if you like it

திருமாவளவனுக்குத் தெரிந்த சனாதனம் வேறு. எங்களுக்குத் தெரிந்த சனாதனம் வேறு. அப்படிப் பார்த்தால் திராவிட மாடல் என்பது குடிப்பழக்கம் என்று வைத்துக் கொள்ளலாமா? என்று சவுக்கடி கேள்வி எழுப்பி இருக்கிறார் மலேசிய அமைச்சர்.

மலேசியாவில் கடந்த சில தினங்களுக்கு முன்பு 11-வது உலகத் தமிழ் மாநாடு அங்குள்ள மலாய் பல்கலைக்கழகத்தில் நடந்தது. இம்மாநாட்டில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்ததால், அவரும் கலந்துகொண்டார். ஆனால், தமிழகத்தில் நடக்கும் அக்கட்சி மற்றும் கூட்டணிக் கட்சிகளில் பேசுவதுபோல, அங்கும் சென்று சனாதனத்தை வேரறுப்போம் என்று கூறியதோடு, ஜாதி மற்றும் மத அரசியல் குறித்து பேசினார். இவரது பேச்சைக் கேட்டு எரிச்சலடைந்த பலரும், பேச்சை நிறுத்துடா டேய்… என்று கூச்சலிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், திருமாவளவன் பேசியது குறித்து மலேசிய நாட்டின் துணை அமைச்சர் சரஸ்வதி கந்தசாமியிடம், தமிழகத்தைச் சேர்ந்த தனியார் யூடியூப் சேனல் ஒன்று பேட்டி எடுத்தது. அப்போது பேசிய அமைச்சர் சரஸ்வதி, “திருமாவளவன் குறிப்பிட்ட சமூகத்தைப் பற்றி பேசியதோடு, சனாதனத்தைப் பற்றியும் தவறாக பேசினார். சனாதனம்தான் ஏற்ற தாழ்வுக்குக் காரணம் என்கிறார். ஆனால், எங்களுக்குத் தெரிந்த சனாதனம் எல்லோரும் சமமாகவும், ஒற்றுமையாகவும் இருப்பதைத்தான் சொல்லிக் கொடுத்திருக்கிறார். ஆகவே, திருமாவளவனுக்குத் தெரிந்த சனாதனம் வேறு, எங்களுக்குத் தெரிந்த சனாதனம் வேறு.

அது மட்டுமல்ல, திருமாவளவன் பேசியது யாருக்குமே சுத்தமாக பிடிக்கவில்லை. காரணம், நடந்தது உலகத் தமிழ் மாநாடு. இம்மாநாட்டில் தமிழைப் பற்றியும், தமிழ் மொழியைப் பற்றியும், தமிழ் அறிஞர்களைப் பற்றியும் பேசி பெருமைப்படுத்தி இருக்க வேண்டும். அதை விடுத்து, அரசியலையும், ஜாதி, மதம் பற்றியும் தேவையில்லாமல் பேசி சர்ச்சையை ஏற்படுத்தி விட்டார். அவரது கூற்றுப்படி பார்த்தால், தமிழகத்திலிருந்து மலேசியாவுக்கு வேலைக்கு வரும் நபர்கள் குடிப்பழக்கத்துக்கு ஆளானவர்களாக இருக்கிறார்கள். அப்படியானால் தமிழகத்தில் இருக்கும் திராவிட மாடல் என்பது குடிப்பழக்க மாடலா?” என்று சொல்லி, திருமாவளவனோடு சேர்த்து ஸ்டாலினையும் தாக்கி இருக்கிறார்.

இவரது வீடியோதான் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.


Share it if you like it